அல்டிமேட் ஸ்டாரும் வேண்டாம்.. "தல" யும் வேண்டாம்.. ஏ.கே. கூட ஓகேதான்- நடிகர் அஜித் அறிக்கை
சென்னை: தல என்று என்னை யாரும் அழைக்க வேண்டாம். பெயர் சொல்லி அழைத்தாலே போதும் என நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித்குமாரை தனது அபார நடிப்பாற்றலால் ரசிகர்களிடையே அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்கப்பட்டு வந்தார். 2012 ஆம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் பட்டியலில் அஜித்குமார் 61 ஆவது இடத்தை பிடித்திருந்தார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டு சற்று முன்னேறி போர்ப்ஸ் பத்திரிகையில் 51 ஆவது இடத்திற்கு வந்தார். கேட்பவர்களுக்கு உதவிகளை செய்து வருவார். ரசிகர்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துவார்.

சொந்த வீடு
தனது வீட்டில் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுத்துள்ளார். இவர் பல்வேறு அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புப்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியே இருந்து வருகிறார். தனது படத்திலும் அரசியல் வாடை அடிக்காமல் பார்த்துக் கொள்வார்.

ரசிகர் மன்றம்
ஏகோபித்த ரசிகர்களின் ஆதரவை பெற்ற அஜித், ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னை அல்டிமேட் ஸ்டார் அஜித் என ரசிகர்கள் அழைத்த போதும் அப்படி அழைக்க வேண்டாம் என அறிவித்தார்.தனது படங்களிலும் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் வராமல் பார்த்து கொண்டார். ரசிகர் மன்றத்தை அவர் கலைத்த போதிலும் சமூகவலைதளங்களில் உள்ள ரசிகர்கள் கிளப் செய்யும் அலப்பறை வலிமை விவகாரத்தில் நன்றாக தெரிந்தது.

வலிமை அப்டேட்
அப்போதும் அவர் ரசிகர்களை அன்பாக கண்டித்தார். வலிமை அப்டேட் வரும் நேரத்தில் வரும் என்றார். அல்டிமேட் பட்டத்தை துறந்தது போல் இனி தல என அழைக்க வேண்டாம் என அஜித் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் அறிக்கையை அவரது மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், பெரும் மரியாதைக்குரிய ஊடக பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என் பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே. என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

ஆரோக்கியம்
தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் , அன்புடன் அஜித்குமார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications