புயலாய் பாய்ந்த அஜித் மகன்! சோசியல் மீடியாவில் டிரெண்டாகும் வீடியோ.. நீங்களே பாருங்க
சென்னை: நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி, கார் பந்தயங்களிலும் பங்கேற்று வெற்றியை குவித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகன் ஆத்விக்கின் வீடியோ சோசியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர்களுக்கு பெயரும் புகழும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே, அதை விட்டுக்கொடுக்க அவர்கள் தயக்கம் காட்டுவார்கள். மட்டுமல்லாது புகழை குறைக்கும் வகையில் எந்த செயலையும் செய்வதற்கு தயங்குவார்கள். ஆனால் வெகுசிலர் மட்டுமே இந்த தடைகளை உடைப்பார்கள். அதில் நடிகர் அஜித்தும் ஒருவர்.

சினிமாவை தாண்டி, பைக் பந்தயங்களில் அவருக்கு இருந்த ஈடுபாடு அலாதியானது. நாடு முழுவதும் பைக்குகளில் ரெய்டு செய்து அதன் அனுபவங்களை சேகரித்திருந்தார். ஆனால் சினிமாவில் இவரை நம்பி பலர் இருப்பதால், பைக் பந்தயத்தை முழுமையாக தொடர முடியாமல் போனது. மட்டுமல்லாது பந்தயங்களில் நடக்கும் விபத்துகளால் இவரை நம்பியிருந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவருக்கு முதன் முதலில் படவாய்ப்பு வழங்கிய இயக்குநர் கூட, பைக் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார். அஜித்தால் சொன்ன நேரத்திற்கு படத்தை முடித்துக்கொடுக்க முடியவில்லை.
இந்த புள்ளி அஜித்தை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதனையடுத்துதான் அவரது கவனம் கார் பந்தயம் பக்கம் திரும்பியது. ஆரம்பத்திலிருந்தே இவருக்கு கார் பந்தயம் மீது ஆர்வம் இருந்தாலும், அதில் ஈடுபட பொருத்தமான நேரம் வரவில்லை. பைக் பந்தய விபத்து இதற்கான தருணத்தை ஏற்படுத்தி கொடுத்துவிட்டது.

கார் பந்தயங்களில் அஜித்தின் கவனம் திரும்பியது. தீவிரமான பயிற்சி, விடாமுயற்சி என களமிறங்கிய அஜித் கார் பந்தயங்களில் தனது பங்கேற்பை தீவிரப்படுத்த தொடங்கினார். அதன் விளைவு சர்வதேச கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 3வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அஜித்தின் வெற்றியை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அப்படியே தலஅஜிதை பார்ப்பது போல் இருக்கு பள்ளி விழையாட்டு போட்டியில் முதர் இடம் பிடித்த தலஅஜித்தின் மகன் ஆத்விக்❤️🫰🤙#AjithKumar pic.twitter.com/eWxiQlyY9L
— Suresh Thala Rasigan (@sureshthalaras1) January 29, 2025
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம், தன்னை சார்ந்தவர்களை அவர் தொடர்ந்து விளையாட்டில் ஈடுபடுத்தி வருகிறார். இவரது ரசிகர்கள் பலர் முறையான கார் பந்தயங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், அஜித்தின் மகன் ஆத்விக், அவரது பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்திருக்கிறார். ஓட்டப்பந்தய போட்டியில் சக மாணவர்களை வீழ்த்தி ஆத்விக் முதலிடம் பிடித்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது. இந்த வீடியோ கடந்த ஓராண்டுக்கு முன்னரே வெளியானதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications