அக்ஷரா ரெட்டிக்கு டிஸ்லைக் கொடுத்தது சரிதான் போல!.. சமாதானம் செய்ய வந்த இசைவாணி ஃபேக்காம்!
சென்னை: மாடல் அழகி அக்ஷரா ரெட்டிக்கு கன்டெஸ்டென்ட்கள் டிஸ்லைக் கொடுத்தது சரி தான் என்பதை போலவே அவர் இசைவாணியை போலி என கூறியதிலிருந்து தெரிகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல்ஹாசன் ஒவ்வொருவரும் லைக், டிஸ்லைக், கொடுத்துவிட்டு எதற்காக கொடுக்கிறீர்கள் என்ற காரணத்தை விளக்குமாறு கமல் கூறுகிறார்.
அப்போது இசைவாணி, சுருதி உள்ளிட்டோர் அக்ஷரா ரெட்டிக்கு டிஸ்லைக் கொடுக்கிறார்கள். இருவருமே தங்களிடம் அக்ஷரா ரெட்டி பேசுவதில்லை என்றும், தாங்களே போய் பேசியும் அவர் அவாய்டு செய்கிறார் என்பது போல் தெரிவித்தனர். இதையடுத்து அக்ஷரா மறுத்தார்.

சமாதானம் செய்த சின்னப்பொண்ணு
பின்னர் நிகழ்ச்சி இடைவேளையின் போது அழுது கொண்டிருந்த அக்ஷரா ரெட்டியை சின்னப்பொண்ணு சமாதானப்படுத்துகிறார். அப்போது அங்கு வந்த இசைவாணி, நீங்கள் பேசவில்லை என ஃபீல் செய்தேன். ஆனால் நீங்கள் அழும் போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றார். அதற்கு அக்ஷரா, "இசை இந்த வீட்டில் நீங்கள் பேசி நான் என்றைக்கு பேசாமல் இருந்திருக்கிறேன். அதை சொல்லுங்கள். நீங்கள் பேசி நான் எப்போதுமே ஸ்டே அவே என சொன்னதே இல்லை.

நீங்கள் பேசாட்டி நான் என்ன செய்றது?
நீங்கள் என்னிக்கு வந்து பேசினாலும் நான் பேசுவேன். நீங்கள் பேசாவிட்டால் அதற்கு நான் என்ன செய்வது? நீங்கள் என்னிடம் பேசி நான் என்றைக்காவது எனக்கு உங்களை பிடிக்காது என சொல்லியிருக்கேனா. நாடியாவிடம் கூட நான் இப்போதுதான் முதல்முறையாக பேசினேன். ஒவ்வொருவருத்தருக்கும் ஒவ்வொரு கேரக்டர் இருக்கும். அதை யாரும் மாற்றிக் கொள்ள முடியாது என்கிறார்.

இசைவாணி
அப்போது அங்கு வந்த சுருதி, நான் எத்தனையோ முறை உங்களிடம் பேசியிருக்கிறேன். ஆனால் நீங்கள் அதற்கு பதிலே சொன்னதில்லை. அதனால் என்னை நீங்கள் தவிர்க்கிறீர்களோ என நினைத்தேன் என்கிறார். சுருதி பேசி கொண்டிருக்கும் போதே அங்கிருந்த இசைவாணி, எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் என்கிறார். அதற்கு உடனே அக்ஷரா, சாரி இசை நீங்கள் இப்போது பேசுவது போலியாக தெரிகிறது. நீங்கள் செய்ததெல்லாம் சரி. ஆனால் ஒரு நிமிடத்தில் இப்படி போலியாக பேசுவது எனக்கு ஃபேக்காக தெரிகிறது என முகத்திற்கு அடித்தாற் போல சொல்லிவிட்டார் அக்ஷரா.

எலிமினேஷன் பிராசஸ்
தற்போது இன்று முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பிராசஸ் நடந்து கொண்டிருக்கிறது. அதில் நாடியா சாங்க, நிரூப் நந்தகுமார், பிரியங்கா தேஷ்பாண்டே. அக்ஷரா ரெட்டி, அபினவ், இமான் அண்ணாச்சி, இசைவாணி, அபிஷேக் ராஜா ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்படுவதாக ப்ரோமோவில் பிக்பாஸ் தெரிவிக்கிறார். இதில் இசைவாணி அக்ஷரா ரெட்டி நாமினேட் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications