அக்ஷய திருதியை 2026: ஒன்னு பத்தாகும்! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்ஷய திருதியை நன்னாளில் தங்கம் வாங்கும் பழக்கம் இந்தியர்களிடம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்துக்கள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் இந்த நாளில் தங்கத்தை அதிகமாக வாங்குகின்றனர். இந்த நாளில் வாங்கப்படும் தங்கம் வளமும், செழிப்பும் தரும் என்ற நம்பிக்கை காரணமாக, ஆண்டுதோறும் அக்ஷய திருதியை தங்கக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டின் அக்ஷய திருதியை தங்க முதலீட்டுக்கு ஏற்ற காலமாக இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது தங்கத்தின் விலை முன்பு இருந்த உச்ச நிலையை விட கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) சந்தையில் தங்க விலை கடந்த மாதங்களுடன் ஒப்பிடும்போது 20 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது.

Akshaya Tritiya

கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்காவின் வட்டி விகிதக் குறைப்பு தாமதம் போன்ற காரணங்கள் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. ஆனால் விலை தற்காலிகமாக குறைந்திருந்தாலும், நீண்ட காலத்தில் தங்கத்தின் மதிப்பு மீண்டும் உயரும் வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அக்ஷய திருதியை 2026

உலகளவில் கடன் அளவு அதிகரித்து வருவது மற்றும் பல நாடுகள் அமெரிக்க டாலரின் மீது இருந்த சார்பை குறைக்க முயற்சிப்பது போன்ற மாற்றங்கள் தங்கத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கி வருகிறது. இதனால் பல நாடுகளின் மத்திய வங்கிகளே அதிக அளவில் தங்கத்தை கையிருப்பாக வாங்கி சேமித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், உலகளவில் அரசியல் பதற்றங்கள் மற்றும் போர் சூழல்கள் தொடர்ந்து நிலவி வருவது முதலீட்டாளர்களை பாதுகாப்பான சொத்தாக கருதப்படும் தங்கத்தின் பக்கம் திருப்பி விட்டுள்ளது.

தங்கம் வாங்கலாமா?

பொருளாதார நிலைமை பாதிக்கப்படும் சூழலில் பங்குச் சந்தை போன்ற ஆபத்தான முதலீடுகளை விட தங்கம் பாதுகாப்பான தேர்வாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் பல நிபுணர்கள், நீண்டகால முதலீட்டுக்காக தங்கத்தை தேர்வு செய்யலாம் என்று பரிந்துரைக்கின்றனர். மேலும், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் எளிதாகியுள்ளது.

தங்க முதலீடு

முன்பு போல பெரிய தொகை இல்லாமல் கூட, சிறிய தொகைகளில் 'டிஜிட்டல் தங்கம்' அல்லது 'கோல்ட் ETF' போன்ற முறைகளில் முதலீடு செய்ய முடிகிறது. இதனால் இளம் தலைமுறையினரும் தங்க முதலீட்டில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இந்தியாவில் தங்கம் என்பது ஒரு முதலீடு மட்டுமல்ல; அது ஒரு பாரம்பரியமும் கூட. திருமணம், விழாக்கள், குடும்ப சேமிப்பு போன்ற பல விஷயங்களில் தங்கம் முக்கிய இடம் பிடித்து வருகிறது. அதனால் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டாலும், தங்கத்தின் மீதான நம்பிக்கை குறைவதில்லை.

சரியான நேரமா?

தற்போதைய விலை சரிவு மற்றும் உலகளாவிய பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டால், இந்த ஆண்டின் அக்ஷய திருதியை தங்கத்தில் முதலீட்டை தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் பெரிய தொகை முதலீடு செய்வதை விட, படிப்படியாக முதலீடு செய்வது பாதுகாப்பான நடைமுறையாக இருக்கும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+