ஆலந்தூருக்கே ஆச்சரியம்.. போரூரில் விழுந்த நிம்மதி தகவல்.. மாதவரம் டூ சோழிங்கநல்லூர் மெட்ரோவின் மாஸ்
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.. இதைக்கேட்டு மாதவரம் - சோழிங்கநல்லுார் பகுதியே மகிழ்ச்சியில் துள்ளுகிறது.
சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது.. மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் வரை உள்ளது..இந்த எண்ணிக்கை இனி இன்னும் அதிகமாகும் என்றும் நம்பப்படுகிறது..

மெட்ரோ சேவை: அதேசமயம், சென்னையின் அனைத்து பகுதிகளையும் டவுன் பஸ்கள் போலவே, மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் இணைத்தாக வேண்டியுள்ளது... இதற்காகவே, சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
மாதவரம் - சிறுசேரி இடையே 45.4 கி.மீ தொலைவுக்கு 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே 26.1 கி.மீ தொலைவுக்கு 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 44.6 கி.மீ தொலைவுக்கு 5-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, 2-ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் 15 ரயில்நிலையங்களில் வழித்தடம் மாறும் வசதி அமைக்கப்படவும் உள்ளது.
மாதவரம்: குறிப்பாக, மாதவரம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், போரூர், ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், கோயம்பேடு புறநகர் பஸ்நிலையம், திருமங்கலம், வடபழனி, நந்தனம், பரங்கிமலை, ஆலந்தூர் ஆகிய 15 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஒரு வழித்தடத்தில் இருந்து இன்னொரு வழித்தடத்துக்கு மாறி ஏறி செல்லும் வசதிகள் இருக்குமாம்.
இந்த 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வரும் 2026-ம் ஆண்டு முதல் படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
சோழிங்கநல்லூர்: மாதவரம் - சோழிங்கநல்லூர் 5-வது வழித்தடத்தில், போரூர் - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் பணிகளை விரைவாக முடித்து, சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.. இந்த வழித்தடத்தில் 41 கி.மீ. தொலைவு வரை மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் பாதை வருகிறது.. இதன்காரணமாக, மற்ற இடங்களை காட்டிலும் இந்த வழித்தடத்தில் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications