Alangulam: ஆலங்குளத்தில் பூங்கோதைக்கு ஏமாற்றம்.. மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு! நேரடியாக மோதும் திமுக vs அதிமுக!
சென்னை: திமுக வேட்பாளர்கள் பட்டியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓ பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே ஆலங்குளம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த மனோஜ் பாண்டியனுக்கு அதே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பூங்கோதை ஆலடி அருணாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே ஆர்பி பிரபாகரன் மற்றும் மனோஜ் பாண்டியன் இடையே நேரடி போட்டில் நிலவுகிறது. ஆலங்குளம் தொகுதி நாடார் மற்றும் தேவர் சமுதாய வாக்குகள் நிறைந்த தொகுதி என்பதால், ஹரி நாடார் மற்றும் விஜய்யின் தவெக சார்பில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 223-வது தொகுதியாக இருப்பது ஆலங்குளம். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில், வீரகேரளம்புதூர், தென்காசி தாலுகாக்களும், ஆலங்குளம், கீழப்பாவூர், ஆழ்வார்குறிச்சி, நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கூடல் ஆகிய நகர பஞ்சாயத்துகளும் கடையம், ஆலங்குளம், கீழப்பாவூர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி யூனியன் ஆகிய யூனியன்களும். அமைந்துள்ளன.
இந்த தொகுதியில் தான் சுப்பிரமணிய பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த கடையத்தில் பழமையான கல்யாணியம்மன் கோவில் உள்ளது. கீழப்பாவூர் நரசிம்மர் கோவில், சிவசைலம் கோவில், நல்லூர் தூய பவுல் ஆலயம், பொட்டல்பூர் தர்கா உள்ளிட்ட புகழ் பெற்ற ஆன்மீக தளங்களும் உள்ளன. இதன் தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., க.கா.தே.கா., உள்ளிட்ட கட்சிகள் இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளன.
திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்
இதுவரையிலும் ஆலங்குளம் தொகுதி 16 முறை சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் 4 முறையும் (1952, 1962, 1989,1991), அ.தி.மு.க. 4 முறையும் (1977,1984, 2001, 2012), தி.மு.க. 5 முறையும் (1967,1971,1996,2006,2016), கா.க.தே.கா.(1980), சுயேச்சையாக (1957) தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெற்ற செல்லபாண்டியன் சபாநாயகராக இருந்துள்ளார்.
ஆலடி அருணா, அவருடைய மகள் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். கடந்த 2021 தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். அதன் பிறகு தி.மு.க.வுக்கு சென்றதால் எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
அதிமுக சார்பில் கேஆர்பி பிரபாகரன்
தற்போது திமுக சார்பில் மனோஜ் பாண்டியனுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பில் கே ஆர் பி பிரபாகரன் களம் இறங்கியுள்ளார். இதனால் மனோஜ் பாண்டியன் மற்றும் பிரபாகரன் இடையே போட்டி உள்ளது. பூங்கோதை ஆலடி அருணாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சுயேச்சையாக ஹரி நாடார் களம் இறங்குவார் என்பதாலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டிபிவி விபிண் சக்கரவர்த்தி களம் இறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நாடா சமுதாய வாக்குகள் நிறைந்த இந்த தொகுதியில் அதிமுக மற்றும் திமுக மாறி மாறியே ஆட்சி அமைத்துள்ளன. அதன்படி கடந்த முறை அதிமுக வெற்றி பெற்றதால் இந்த முறை திமுகவுக்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், ஹரி நாடார் மற்றும் தவெக வாக்குகளை பிரிப்பதால் யார் வெற்றி பெறுவார் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். கடந்த முறை மனோஜ் பாண்டியன் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications