Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

70 லட்சம் பேர் தினமும் குடிக்கிறாங்க! தமிழகத்தில் 1.12 கோடி குடிநோயாளிகள்! அரசுக்கு 25000 கோடி லாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் மதுப்பழக்கம் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மதுவுக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் குடி நோயாளிகள் 1 கோடியை 12 லட்சம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் 70 லட்சம் பேர் தினமும் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அதனை விட அதிகமாக சில மாநிலங்களில் குடிநோயாளிகள் எண்ணிக்கை இருக்கும் ஒரு மாநிலமும் இருக்கிறது.

குறிப்பாக மது பழக்கம் இளைஞர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் மது விற்பனை என்ற சட்டம் இருந்தாலும் மது கடைகளில் அவை கடைபிடிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான்.

Alcoholism Tamil Nadu tasmac

அதே நேரத்தில் மதுப்பழக்கம் உடல்நல பிரச்சனை மட்டுமல்லாமல் சமூக பிரச்சனையாகவும் மாறுகிறது. மது குடித்த உடனேயே அது நேரடியாக ரத்தத்தில் கலக்கிறது. சிறிது நேரத்திற்கு உற்சாகம் பிறந்தது போல் இருந்தாலும் நாளடைவில் அது உடல் பாகங்களை சிறிது சிறிதாக கெடுத்து நமது உடல் நலனை அடியோடு சீரழிக்கும்.

ஒரு காலத்தில் ஊருக்கு ஒருவர் அல்லது இருவர் மது குடிப்பவர் ஆக இருப்பார்கள். ஆனால் இப்போது ஊருக்குள் ஒருவர் அல்லது இருவர்தான் மது குடிக்காமல் இருக்கிறார்கள் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அது மட்டுமல்லாமல் சிறு வயது தொடங்கி முதியவர்கள் வரை பலரும் போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இனிமேல் நான் குடிக்க மாட்டேன் என மறுபடியும் கூறினாலும் அடுத்த நாளே மதுபோதையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறார்கள். காலப்போக்கில் அவர்கள் குடி நோயாளிகளாக மாறிவிடுகின்றனர்.

சின்ன சின்ன சந்தோஷத்திற்காக குடிக்கிறேன் என வாரம் ஒரு முறை, மாதம் ஒருமுறை குடிப்பவர்கள் 17 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட வயதில் அவற்றை நிறுத்தாதவர்கள் அதற்கு பிறகு அதனை அதிகரித்துக் கொள்கிறனர். உடல் வலிக்காக குடிக்கிறேன், மன வேதனைக்காக குடிக்கிறேன் என பல்வேறு வகை குடிகாரர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள், நட்சத்திர ஹோட்டல்களில் பணியில் இருப்பவர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஐடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், பிரேத பரிசோதனை கூடத்தில் பணியாற்றுபவர்கள் ஆரம்பத்தில் சிறிய அளவில் குடிக்க பழகி காலப்போக்கில் தின குடிகாரர்களாக மாறிவிடுகிறார்கள்.

அப்படி மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை உடனடியாக மீட்பதும் கடினம். குடிக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவ ரீதியாகவும் மனரீதியாகவும் சில ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தினமும் குவாட்டருக்கு அதிகமாக குடிக்க வேண்டியவர்கள் குடி நோயாளிகள் ( ஆல்கஹால் யூஸ் டிசார்டர்) என அழைக்கப்படுகிறார்கள். ஆரம்பத்தில் கொஞ்சமாக குடிக்க பழகும் அவர்கள் போகப் போக மீள முடியாத அடிமைகளாக மாறிவிடுகிறார்கள்.

அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்தவரை குடி நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலம் அருணாச்சலப் பிரதேசமாகும். அதே நேரத்தில் லட்சத்தீவு குஜராத், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குடி நோயாளிகள் குறைவாக இருக்கிறார்கள். இந்தியாவை பொருத்தவரை குடி நோயாளிகள் 16 கோடி பேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் 19 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட ஆண்களே அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் 95 சதவீதம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

கிராமப்புறங்களில் பெண்கள் 1.6 சதவீதமும், ஆண்கள் 19.9% இருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் 0.6 சதவீதம் பெண்களும், 16.5% ஆண்களும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1.12 கோடி பேர் குடி நோயாளிகளாக இருக்கிறார்கள். அவர்களில் 70 லட்சம் பேர் தினமும் குடிக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குடிநோயாளிகள் ஒவ்வொரு மாதமும் குடிப்பதற்காக மட்டுமே 4312 கோடியிலிருந்து 652 கோடி வரை செலவிடுகிறார்கள். இதனால் ஆண்டுக்கு அவர்களுக்கு 67,552 கோடி வருமான இழப்பு ஏற்படுகிறது.

அதே நேரத்தில் அரசுக்கும் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைகள் அளிப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் அந்த மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+