தமிழ்நாடு மின் வாரியத்தையே அதிர வைத்த விஷயம்.. வீட்டில் யுபிஎஸ் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பாருங்க
சென்னை: நம்முடைய வீட்டுக்கு சப்ளை கொடுக்கும் கம்பத்தில் வேலை செய்யும் லைன்மேன்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய நம்ம வீடுகளில் மாட்டியிருக்கும் யுபிஎஸ் என்ன மாதிரியாக கனெக்சன் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மின்சாரம், சூரிய மின்சக்தி தொடர்பான நிபுணரான பாலு, பல்வேறு தொழில்நுட்ப ரீதியான தகவல்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவர் நேற்று வெளியிட்ட பதிவு மிகவும் முக்கியமானது. அது யுபிஎஸ் வைத்துள்ள அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. அதனை இப்போது பார்க்கலாம்.

"நம்முடைய வீட்டுக்கு சப்ளை கொடுக்கும் கம்பத்தில் வேலை செய்யும் லைன்மேன்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய நம்ம வீடுகளில் மாட்டியிருக்கும் யுபிஎஸ் என்ன மாதிரியாக கனெக்சன் செய்யவேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் வீடுகளுக்கு மின் வினியோகம் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் அந்த அந்த ஏரியாவில் ட்ரேன்ஸ்பாமர் வைத்து பக்கத்தில் உள்ள (SS) சப்ஸ்டேசன்ல இருந்து 11kv இல்ல 22kv கம்பி வடம் வழியாக கொண்டு வந்து 2போல் ஸ்டச்சர்ல AB ஸ்வுச் வழியாக HT ப்யூஸ் கண்ட்ரோல் வழியாக ட்ரேன்ஸ்பாமர்ல இன்புட் சைடு கொடுத்துடுவாங்க, ட்ரேன்ஸ்பாமர் அவுட்புட்ல இருந்து வர்ற 440v ப்யூஸ் கண்ட்ரோல் வழியாக மின் வினியோகம் செய்வதற்கு கம்பி வடம் வழியாக அந்த அந்த ஏரியாவிற்கு அனுப்புவார்கள்..
அப்படி அனுப்பும் மின்சாரத்தை நம்ம வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மின் கம்பத்தில் இருந்த அந்த அந்த ஏரியாவுக்கு பிரிச்சு கொடுப்பார்கள் (முதல்ல கம்பத்துல அந்த அந்த வீட்டுக்கு தனி தனி ப்யூஸ் வைத்து இருந்தார்கள் ) இப்போது அது மாதிரி இல்லாமல் நம்ம வீட்டுக்கு வரும் இரண்டு ஒயர்ல ஒரு ஒயர நியூட்ரல்ல ஜம்பர் அடிச்சுடுவாங்க இன்னொரு ஒயரை மூன்னு (RYB) பேஸ்ல எதாவது ஒரு பேஸ்ல ஜம்பர் அடிச்சுடுவாங்க.. அந்த இரண்டு ஒயரும் நம்ம வீட்டு இருக்க KWH மீட்டர்ல கொடுத்து அந்த மீட்டர்ல இருந்து அவுட்புட் எடுத்து ஒரு ப்யூஸ்ல 220v சப்ளை கொடுத்து அதுல இருந்து அவுட்புட்ட எடுத்து ஒரு மெயின்ல பேஸ்ச ப்யூஸ் கண்ட்ரோல்லயும் நியூட்ரல டைரக்ட் லிங்க்லயும் கொடுத்து, மெயின் ஆன் செய்தால் ( இப்போது MCB யூஸ் செய்கிறோம்) அதுலிருந்து வரும் அவுட்புட்டை நம் வீட்டு பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறோம்..
அவர் அவர் வசதிக்கேட்ப UPS பயண்படுத்துகிறோம் நம் வீடுகளில் இப்போது பயன்படுத்தும் UPS எப்படி கனைக்ட் செய்கிறோம் என்றால் UPSக்கு சிஸ்டம் வேல்டேஜ் டைரக்ட் 220v எடுத்து கொடுக்கிறோம் அப்போது UPS வழியாக பேட்டரி சார்ஜ் ஆகிறது அடுத்து நம் வீட்டில் கரண்ட் கட் ஆகும் போது UPS வழியாக 220v சப்ளை நம்ம எந்த எந்த சர்க்யூட்ல UPS சப்ளை கணைக்ட் செய்து உள்ளோமோ அந்த அந்த சர்க்யூட்க்கு சப்ளை போய் லைட் ஏரிகிறது..இதுல முக்கியமாக கவனிக்க வேண்டியது நம் பயன்படுத்தும் UPS இருந்து 220v மட்டும் தான் கிடைக்கும் நியூட்ரல் EBல இருந்து வர்றத தான் யூஸ் ஆகுது, இங்க தான் பிரச்சனையே ஆரம்பம் எப்படினா..
உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்ல கம்பத்துல இருந்து சப்ளை வரலைனு EBக்கு தகவல் கொடுத்தீங்கன்னா உங்க ஏரியா லைன்மேன் வந்து உங்க ஏரியாவுக்கு மின் வினியோகம் செய்யும் ட்ரேன்ஸ்பாமர்ல இருக்க AB சுச்சுக்கு உள்ள கேன்டில் போட்டு ஆப் பண்ணிட்டு அந்த கேன்டிலோட உங்க வீட்டுக்கு பக்கத்தில் கம்ளைட் கொடுத்த வீட்டுக்கு சப்ளை போகும் கம்பத்துல ஏரி செக் பண்ண போகும் போது நியூட்ரல் வழியாக அவர்க்கு இன்டெக்சன் ஆகும், இந்த இன்டெக்சன் வருவதற்கு காரணம் கரண்ட் ஆப் ஆனவுடன் உங்கள் வீட்டில் உள்ள UPS ஆன் ஆகிடும், அந்த சப்ளை நியூட்ரல்ல இன்டெக்சன் ஆகும், உங்க ஒரு வீட்ல மட்டும் UPS இருந்தா உங்க வீட்டு மெயின ஆப் பண்ண சொல்லாம்.
ஆனால் இப்போது பரவலாக எல்லோரும் யூபிஎஸ் யூஸ் பண்றாக அதுநாள கம்பத்துல வேலை செய்ற லைன்மேன்க்கு பாதுகாப்ப உறுதி செய்ய நம்ம வீட்டு EBலைன்ல சின்ன ஆல்டர் பண்ணனும் அப்போது கம்பத்தில் வேலை செய்யும் லைன் மேன்க்கு பாதுகாப்பு உறுதியாக இருக்கும் நமக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. உங்க வீட்ல இருக்க KWH மீட்டர்ல இருந்து கட்டவுட்டு இருக்க ப்யூஸ்ல இருந்து வர்ற 220v எடுத்து ஒரு 25A, 220 coil voltage, (2NO, 2NC, ) ஒரு கண்ட்ரோல் காண்டைட் வாங்கி அந்த காண்டைட் இருக்க 2NC பாயிண்ட்ல ஒரு பாயிண்ட்ல 220v AC யும் இன்னொரு NC பாயிண்ட்ல நியூட்ரலும் கொடுத்து அதோட இன்னொரு சைட் இருக்க ரெண்டு ஒயர எடுத்து உங்க மெயின் சுச்சு இன்புட்ல கொடுத்துடுங்க EBல இருந்து சப்ளை இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் லைட் ஏரியும்.. அடுத்து EB பவர் ஆப் ஆனவுடன் UPSல இருந்து வர்ற 220v சப்ளைய காண்டைட்ல இருக்க 2NO பாயிண்ட்ல ஒரு NO பாயிண்ட் சைடுல 220v கொடுத்துடுங்க..
அதுக்கூடவே ஒரு ஒயர எடுத்து காண்டைட்டோட காயில் சப்ளைல ஒரு சைடு கொடுத்துடுங்க, அடுத்து வீட்டுக்கு வெளிய ஈரமாக இருக்க எடத்துல 4அடிக்கு ஒரு GI பைப்ப அடிச்சு மட்டத்துக்கு இறக்கிட்டு பைப் டாப்ல ஒரு ஓட்டை போட்டு அதுல ஒரு ஜிங்போல்ட் மாட்டி அதுல இருந்து 2sqmm காப்பர் ஒயர் வழியாக ஒரு நியூட்ரல தனியாக கொண்டு வந்து காண்டைட்டோட இன்னொரு NO பாயிண்டோட இன்னோரு சைடுல கொடுத்துட்டு அதுல இருந்து இன்னொரு ஒயர் எடுத்து காண்டைட்டோட காயில் சாப்ளைல இன்னொரு சைடு கொடுத்துடுங்க, இனி என்ன பண்ணனும்னா காண்டைட்டோ 2No பாயிண்டோட இன்னொரு சைட்ல இருந்து வர்ற ரெண்டு ஒயர எடுத்து 220v உங்க வீட்டு யூபிஎஸ் லைன்ல கொடுத்துடுங்க.
இன்னொரு ஒயர் நியூட்ரல் ஒயர வீட்டுக்கு உள்ள போற நியூட்ரல்ல கொடுத்துடுங்க.. இனி எந்த பிரசனையும் இருக்காது உங்க வீட்ல EBலைன் கட் ஆனா நியூட்ரலும் கட் ஆகிடும் அப்ப உங்க வீட்ல இருந்து கம்பத்துக்கு போற ரெண்டு ஒயர்லயும் எந்த சப்ளையும் ரிட்டன் கம்பத்துக்கு போகாது நியூட்ரல்ல கம்பத்துல வேலை செய்யற லைன்மேனுக்கும் இன்டெக்சன் ஆகாது.. இதுக்கு செலவுனு பாத்தீங்கனா ₹1300/ தான் ஆகும், மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது லைன்மேன் பாதுகாப்பு முதலாவதாக இருந்தாலும் உங்களுக்கு இடி மின்னல் காலங்களில் உங்க மெயின ஆப் பண்ணிட்டு UPSலைன்ல ஆன் பண்ணீங்கனா உங்களோட பொருளுக்கும் பாதுகாப்பு." இவ்வாறு பாலு தனது பதவில் கூறியுள்ளார்.
நம்முடை வீட்டுக்கு சப்ளை கொடுக்கும் கம்பத்தில் வேலை செய்யும் லைன்மேன்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய நம்ம வீடுகளில் மாட்டியிருக்கும் #UPS என்ன மாதிரியாக கனைச்சன் செய்யவேண்டும்னு இந்த பதிவுல பாக்கலாம்..🙏
— Balu (@balu_gs) January 1, 2024
நம் வீடுகளுக்கு மின் வினியோகம் செய்ய #TNEB அந்த அந்த ஏரியாவில்… pic.twitter.com/89SmOGWsFe












Click it and Unblock the Notifications