அடடே, இதுதான் காரணமா... அனைத்து முதல்வர் வேட்பாளர்களும்.. ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து முதலமைச்சர் வேட்பாளர்களும் நேற்று ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக களமிறங்குகிறது. அதேநேரம் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக களமிறங்குகிறது,
இது தவிர கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

ஐந்து முதல்வர் வேட்பாளர்கள்
வழக்கத்துக்கு மாறாக இந்த முறை தமிழ்நாட்டில் ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல திமுக மு க ஸ்டலாின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் கமல்ஹாசனும், அமமுக- தேமுதிக கூட்டணியில் டிடிவி தினகரனும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 234 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தற்போதைய முதல்வரும் அதிமுக முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் அவர் போட்டியிடுவது ஏழாவது முறையாகும்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுகவின் முதல்வர் வேட்பளாரன மு க ஸ்டாலின் நேற்று சென்னை கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடும் மு க ஸ்டாலின் அயனாவரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்..

கோவை தெற்கில் கமல்
மக்கள் நீதி மய்யம் சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கமல் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அவர் ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் கோவை தெற்கு தொகுதியில் நேற்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Array
அதேபோல திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்குள்ள மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மேலும், கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்துக் களமிறங்கும் டிடிவி தினகரன் கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

ஒரே நாளில் 5 முதல்வர் வேட்பாளர்கள்
இப்படி முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று நல்ல நாள் என்பதால் சென்டிமென்டாக அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அனைவரும் நட்சத்திர தலைவர்கள். மற்ற தொகுதியில் போட்டியிடும் பிரபலம் குறைந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக இவர்கள் தான் பிரசாரம் செய்ய வேண்டும். எனவே நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட, தமிழகம் முழுவதும் இந்தத் தலைவர்கள் தங்கள் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.
-
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து











Click it and Unblock the Notifications