ராகுலை போல் முட்டாள்தனமாக.. ட்விட்டரில் கேள்வி கேட்ட தமிழக காங்கிரஸ் நிர்வாகியால் கொதித்த குஷ்பு
சென்னை: மல்யுத்த வீராங்கனைகள் பிரச்சனை பற்றி பேசாமல் இருப்பது ஏன்? என ட்விட்டரில் இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் கேள்வி எழுப்பிய நிலையில் குஷ்பு கடும் கோபமடைந்தார். மேலும் ராகுல் காந்தியை போல் முட்டாள் தனமாக இருக்காமல் சட்டத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனும் வகையில் அவர் பதில் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் குஷ்பு. தற்போது பாஜக கட்சியில் செயல்பட்டு வருகிறார். மேலும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் குஷ்பு பற்றி திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதுதொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் பரவிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். குஷ்பு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து கண்கலங்கினார். பெண்கள் பற்றி அவதூறாக பேச அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. அவர் மீது தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தும். அவர் மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து உடனடியாக திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார். இவர் இதற்கு முன்பு ஆளுநர் ஆர்என் ரவி, பாஜகவில் செயல்பட்டு வரும் நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசி சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது நீக்கம் செய்யப்பட்டார். அதோடு மட்டுமின்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் தான் மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் தொல்லை பிரச்சனை பற்றி குஷ்பு பேசாமல் உள்ளதாக காங்கிரஸ், திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருக்கும் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறி வீராங்கனைகள் டெல்லியில் போராடினர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்னும் கைதாகாத நிலையில் தான் அதுபற்றி குஷ்புவிடம் வலைதளங்களில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருக்கும் வாழப்பாடி ராம சுகந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்விகள் எழுப்பி இருந்தார். மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛தன்னை கண்ணிய குறைவாக பேசியவர் மீது தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு இன்று தன்னுடைய கோபத்தை சமூக வலைத்தளங்களில் கொட்டி தீர்த்தார். பெண் மல்யுத்த வீரர்கள் டெல்லியில் ஒரு மாத காலமாக போராடிய போது அவர்களுக்காக ஏன் அவர் குரல் கொடுக்கவில்லை ? குஷ்பு அவர்களை தர குறைவாக பேசிய நபரை திமுக தன் கட்சியிலிருந்து நீக்கி விட்டது. பெண் மல்யுத்த வீரர்களுக்கு குஷ்பு என்ன செய்யப் போகிறார்?'' என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த பதிவால் குஷ்பு கடும் கோபம் அடைந்தார். உடனடியாக ட்விட்டரில் நடிகை குஷ்பு அவரை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டார். இதுபற்றி குஷ்பு, ‛‛உங்களது அந்தஸ்தை விட கீழே இறங்கி வந்துள்ளீர்கள். காங்கிரஸ் கட்சி இதனை செய்யும். விதிகளை முதலில் சரியாக புரிந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தலைவர் ராகுல் காந்தி போல் முட்டாள் தனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் உறுதி மொழி எடுத்து உள்ளீர்களா? என்ற கேள்வி எழும்.
உங்களின் தடுமாற்றத்தில் இருந்து நீங்கள் மீண்டு கொள்ளுங்கள். சட்டங்களை படியுங்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நிற்பதை விட உங்களுக்கான தாய் மொழியில் நீங்கள் பேசியிருப்பது ஒன்றும் எனக்கு ஆச்சரியமாக இல்லை. நீங்கள் தாமதாக வந்து கேள்வி எழுப்பினாலும் கூட நான் அதனை எதிர்பார்த்தேன்'' என கூறியுள்ளார். இதன்மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதை விட வழக்கம்போல் விமர்சனத்தை கையில் எடுத்துள்ளதாக குஷ்பு, அவரை சாடியுள்ளார்.
-
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா?












Click it and Unblock the Notifications