பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி
சென்னை: பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை காலை சென்னை வர இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை பாஜகவின் தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு கடந்த 25 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 27 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து, அமமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதிமுக, அமமுக, தமாகா ஆகிய கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

பாஜகவுக்கு 27 தொகுதிகள்
பாஜகவுக்கு மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றில், பாஜக 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட மொடக்குறிச்சி, நாகர்கோவில், குளச்சல், ராமநாதபுரம், தளி, திருவண்ணாமலை, உதகமண்டலம், விளவங்கோடு ஆகிய 7 தொகுதிகளை மட்டுமே மீண்டும் பெற்றுள்ளது. பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த முறை வென்ற நெல்லை மற்றும் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் இம்முறை அக்கட்சி போட்டியிடவில்லை.
பாஜக வேட்பாளர்கள்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்முறையாக சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த முறை கோவை தெற்கில் வென்ற வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கில் களமிறங்க உள்ளார். மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளதாகத் தெரிகிறது. அவினாசி தனி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
தொகுதிகள் ஒதுக்கீட்டில் பாஜக தரப்பு கடும் அப்செட் ஆகியுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான தொகுதிகள் ஏற்கனவே அதிமுக கூட்டணி தோற்றுப்போனவை. தங்களுக்கு சாதகமான தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என பாஜகவினர் குமுறி வருகின்றனர். கிணத்துக்கடவு தொகுதியை தங்களுக்கு ஒதுக்காததைக் கண்டித்து பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் இன்னும் பாஜக சார்பில் 27 தொகுதிகளில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்படாமலே இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவின் முக்கிய நபர்களில் ஒருவரான அண்ணாமலை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் சிங்காநல்லூர் பகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறை சிங்காநல்லூர் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் அண்ணாமலை போட்டியிடவில்லை எனக் கூறப்படுகிறது.
நாளை வேட்பாளர் பட்டியல்
இந்த சூழலில் தான் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார் என பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக பாஜகவின் ஆட்சி மன்ற குழு இன்று ஆலோசனை மேற்கொண்டு உள்ளது.
இந்நிலையில், பாஜக தமிழ்நாடு சட்டசபை தேர்தல் மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை காலை 10 மணிக்கு சென்னை வர இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை பாஜகவின் தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாஜகவின் தேர்தல் அறிக்கையையும் பியூஷ் கோயல் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் - உத்தேச பட்டியல்
அமர்பிரசாத் ரெட்டி - தளி
மொடக்குறிச்சி - கிருத்திகா சிவகுமார் அல்லது காயத்ரி
எல். முருகன் - அவிநாசி
ஏ.பி. முருகானந்தம் - திருப்பூர் தெற்கு
நயினார் நாகேந்திரன் - சாத்தூர்
கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் - திருச்செந்தூர்
பொன் ராதாகிருஷ்ணன் - நாகர்கோவில்
எட்வின் ஜோஸ் - பெத்மநாபபுரம்
சிவக்குமார் - குளச்சல்
விஜயதாரணி - விளவங்கோடு
அஸ்வத்தாமன் - திருவண்ணாமலை
கருப்பு முருகானந்தம் - தஞ்சாவூர்
ராமச்சந்திரன் - புதுக்கோட்டை
ஆனந்தன் அய்யாசாமி - வாசுதேவநல்லூர்
ஜி.பி.எஸ். நாகேந்திரன் - ராமநாதபுரம்
பிரேம் குமார் - ராசிபுரம்
தமிழிசை சௌந்தரராஜன் - மயிலாப்பூர்
அஸ்வின் - ஆவடி
வானதி சீனிவாசன் - கோயம்புத்தூர் வடக்கு
போஜராஜன் - உதகமண்டலம்
புரட்சி கவிதாசன் - கந்தர்வகோட்டை
சோழன் சி.த. பழனிச்சாமி - திருப்பத்தூர்
கவிதா ஸ்ரீகாந்த் - அறந்தாங்கி
இராம.சீனிவாசன் - மதுரை தெற்கு
பாலகிருஷ்ணன் - ராதாபுரம்
பண்ணைவயல் இளங்கோ - திருவாரூர்
பொன் பாலகணபதி - மானாமதுரை
-
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
"150 கிராம் தங்கம், ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான் -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications