Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழை நீர் தேக்கம் முதல் மின் சிக்கல் வரை.. எதற்கு எந்த எண்ணில் புகார் அளிக்க வேண்டும்..விரிவான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் உட்பட வடமாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது,

கடந்த சனிக்கிழமை முதல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

 காற்றழுத்த தாழ்வு மண்டலம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை, ஸ்ரீஹரி கோட்டாவுக்கும் காரைக்காலுக்கும் இடையே கடலூரில் கரையைக் கடக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலாக மாறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடப்பதால் வடதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவுக்குப் பின்னர் மழையானது மெல்லக் குறையும் எனக் கூறப்படுகிறது.

 தேங்கிய மழைநீர்

தேங்கிய மழைநீர்

சென்னை தொடங்கி டெல்டா பகுதிகள் வரை அதிதீவிர கனமழை பெய்யும் என்பதால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களாகத் தலைநகர் சென்னையில் பெய்துள்ள கனமழையால் நகரில் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. மோட்டரை கொண்டு நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வந்தாலும்கூட தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

 ரயில்வே உதவி எண்கள்

ரயில்வே உதவி எண்கள்

தொடர்ந்து கொட்டித்தீர்க்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இருப்பினும், தற்போது வரை புறநகர் ரயில் சேவை, எக்ஸ்பிரஸ் ரயில் சேவை என எதுவும் பெரியளவில் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், ரயில் நேரம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரயில் நேரம் தொடர்பான சந்தேகங்களுக்கு 83000 52104, 044 25330952, 044 25330953 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 சென்னை உதவி எண்கள்

சென்னை உதவி எண்கள்

சென்னை மாநகராட்சி சார்பிலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் உதவிகளைப் பெற 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் 94454 77205, 94450 25818, 94450 25820, 94450 25821 என்ற எண்களில் வாட்ஸ்அப் செயலியிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மழை வெள்ளத்தில் பாம்பு,தேள்,பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டினுள் வந்தால் வனத்துறைக்கு 044 22200335 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்

 திருவள்ளூர் உதவி எண்கள்

திருவள்ளூர் உதவி எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை 044 27666746, 1077, 044 27664177 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட உதவி மைய எண்கள் 18005997626

மேலும், 98403 27626, 94443 17862 ஆகிய வாட்ஸ்அப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மின்சார புகார் உதவி எண்கள்

மின்சார புகார் உதவி எண்கள்

அதேபோல மின் சேவை குறித்த புகார்களை மின் நுகர்வோர் சேவை மையமான 98987 94987 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அளிக்கலாம். மழை தொடர்வதாலும், பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் இனைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு மழை நீர் வடிந்ததும் மின் இணைப்பு படிப்படியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+