Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழிசையை வடஇந்தியா அனுப்புங்க! பாஜக ஐடி விங்கை கண்டித்த தமிழிசை! தாக்கிய அண்ணாமலை ஆதரவாளர்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. பாஜகவின் டாப் நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மிக கடுமையான, வெளிப்படையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மோசமாக செயல்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக 1 இடத்தை கூட வெல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவே அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை சென்றார். ஆனால் அந்த யாத்திரையும் பலன் அளிக்கவில்லை.

tamilisai soundararajan south chennai lok sabha election 2024 bjp admk annamalai

பாஜக முன்னாள் தலைவர் எல் முருகனின் வேல் யாத்திரைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் 4 எம்எல்ஏ இடங்களை வென்றது. அதேபோல் தமிழிசை தலைவராக இருந்த போது 2 இடங்களை பாஜக வென்றது.

ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலைக்கு கீழ்.. அவர் என் மண் என் மக்கள் யாத்திரை சென்றும் கூட ஒரு எம்பி சீட் கூட கிடைக்கவில்லை. அவரின் அரசியல் டிராக் ரெக்கார்ட் இதுவரை பூஜ்ஜியமாகவே உள்ளது. இந்த என் மண் என் மக்கள் யாத்திரை வாக்கு சதவிகிதம் ரீதியாகவும், இடங்கள் ரீதியாகவும் சரி அவருக்கும் கட்சிக்கும் பலன் கொடுக்கவே இல்லை.

தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமைக்கு கீழ் கட்சி வளர்ந்துவிட்டதாக வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பெரிய வளர்ச்சி எல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஏற்படவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தமிழிசை அட்டாக்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.

tamilisai soundararajan south chennai lok sabha election 2024 bjp admk annamalai

ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?.

இன்னொன்று நாங்கள் எல்லாம் 2 இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம்.

அதிமுக - பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். எனக்கு கருத்து இருந்தால் நான் சொல்வேன்.

நான் மாநில தலைவரை எதிர்க்கிறேன் என்று சொல்ல மாட்டேன். கூட்டணி அமைத்தால் வென்று இருப்போம் என்று கூறுகிறேன். அவ்வளவுதான், என்றுள்ளார்.

tamilisai soundararajan south chennai lok sabha election 2024 bjp admk annamalai

அண்ணாமலை அட்டாக்: இந்த நிலையில்தான் எக்ஸ் செயலியில் அண்ணாமலை ஆதரவாளர்கள் தமிழிசையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவரை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

அதில்.. தமிழிசைக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்ததே அதிசயம். இப்போது அண்ணாமலையை விமர்சனம் செய்கிறார். அண்ணாமலைக்கு ப்ரீ ஹேண்ட் கொடுங்கள்.

தமிழிசையை வடஇந்தியாவிற்கு ஆளுநராக அனுப்புங்கள். அவர் அண்ணாமலையை தனியாக செயல்பட விட மாட்டார். பாஜகவில் ஒரு திராவிட கும்பல் உள்ளது. அது எஸ் வி சேகர், கல்யாண ராமன், தமிழிசை குழு. இவர்களை எல்லாம் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு ஆதரவான நெட்டிசன்கள் கடுமையாக போஸ்ட் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+