மாஸ்க் அணியாமல் சிக்கிய 3,000 நபர்கள்! தமிழகம் முழுவதும் அபராத வேட்டை! கொரோனா பற்றி அஜாக்கிரதை!
சென்னை: கொரோனா மீண்டும் பரவி வரும் சூழலில் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணியாத ஆயிரக்கணக்கானோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 3,000 பேர் மாஸ்க் அணியாமல் அரசுக்கு அபராதத் தொகையை கப்பம் கட்டிவிட்டு சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல்
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா இப்போது மீண்டும் மெல்ல பரவத் தொடகியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் மாஸ்க் அணிவதை அரசு தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. சென்னையில் மாஸ்ட் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் என்றெல்லாம் கூட அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் கொரோனா நம்மை என்ன செய்துவிடும் என்ற அஜாக்கிரதையில் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதில்லை.

அதிகாரிகள் கெடுபிடி
இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் மாஸ்க் விவகாரத்தில் சற்று கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பொதுவிடங்களில் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்த 3,000 பேரிடம் நேற்று ஒரே நாளில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதற்கெல்லாம் சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்பவர்களை போல் மிகவும் ஹாயாக வலம் வருகின்றனர் பலர்.

சென்னையில் மட்டும்
சென்னையில் மட்டும் ஒரே நாளில் 121 பேர் முக கவசம் அணியாமல் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை மட்டும் 60 ஆயிரத்து 500 ரூபாயாகும். சென்னையிலேயே இப்படி என்றால் கோவை, திருச்சி, மதுரை, போன்ற பெரு நகரங்களில் முக கவசம் அணியாமல் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

விழிப்புணர்வு இல்லை
என்ன தான் அபராதம் போட்டு வசூலித்தாலும் கொரோனா பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் இப்போது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. முன்பை போல் கொரோனாவுக்கு அஞ்சி வீட்டில் முடங்காமல் வரட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்கிற வகையில் தான் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்வாதாரத்தை தேடி ஓடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications