அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பணம் + பொங்கல் பரிசு தொகுப்பு.. முதல்வர் அறிவிப்பு
சென்னை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் (1000 rs for pongal) என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுவரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட ஏதுவாக தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ 1000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
பொங்கல் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு முன்னதாகவே ரேஷன் கடைகளில் ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பொங்கல் தொகுப்புடன் இலவச வேஷ்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் பயனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியை ரேஷன் கடை ஊழியர்கள் தொடங்கினர். வரும் 10ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. விடுபட்டவர்கள் 14 ஆம் தேதி அன்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள்,எந்த பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்காது என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் அதிருப்தியடைந்தனர். எனவே அந்த அறிவிப்பு தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
எனவே, வருமான வரி செலுத்துவோர், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள், சர்க்கரை மற்றும் பிற வகை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் இந்த பரிசு பொருட்கள் மற்றும் பணம் பெற வழி செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications