இன்னும் 10 நாள் தான் டைம்... அதுக்குள்ள வேக்சின் போட்டுக்கணும்.. கடை உரிமையாளர்களுக்கு பறந்த உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்களும் அதில் பணிபுரிபவர்களும் வரும் 15ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா அடுத்த அலை ஏற்படுவதை வேக்சின் மட்டுமே தடுக்கும் என்பதைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளுக்கும் தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்ப்ரெட்டர்

சூப்பர் ஸ்ப்ரெட்டர்

மக்களை தினசரி அதிகம் சந்திக்கும் இடங்களில் பணிபுரிவோர் கட்டாயம் வேக்சின்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றால் சூப்பர் ஸ்ப்ரெட்டர்களாக மாறும் அபாயம் உள்ளதால், இதுபோன்ற இடங்களில் பணிபுரிவோர் கட்டாயம் வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டாயம் வேக்சின் போட வேண்டும்

கட்டாயம் வேக்சின் போட வேண்டும்

இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்களும் அதில் பணிபுரிபவர்களும் வரும் 15ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழின் நகலை சிஎம்டிஏ நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்பேடு காய்கறி சந்தை

கோயம்பேடு காய்கறி சந்தை

முன்னதாக கடந்த ஜூன் மாதம் கோயம்பேடு காய்கறி சந்தை திறக்கப்பட்டது. அப்போது கொரோனா தடுப்பூசி பணிகளில் கடை உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தையில் அனுமதி இல்லை எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியிருந்தார். இப்போது அதேபோல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்களும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையம்

கோயம்பேடு பஸ் நிலையம்

கொரோனா 2ஆம் அலை காரணமாக மே மாதத்தில் பொதுப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. கொரோனா குறைந்ததைத் தொடர்ந்து முதலில் சில மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டது. இப்போது அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் அதிகாரிகள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிறப்புத் தடுப்பூசி முகாம்

சிறப்புத் தடுப்பூசி முகாம்

அதேநேரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் வேக்சின் பற்றாக்குறை நிலவுகிறது. தட்டுப்பாடு காரணமாக இன்று சென்னையைச் சுற்றியுள்ள பல இடங்களில் வேக்சின் பணிகள் நடைபெறவில்லை. இதனால் வேக்சின் எடுத்துக் கொள்வது சிரமம் என்றும் எனவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்களுக்குச் சிறப்புத் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+