Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் அதிரடி தளர்வுகள்.. இ-பாஸ் முதல் ஞாயிறு லாக்டவுன் வரை.. சந்தேகங்களும்.. விளக்கமும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தற்போது கூடுதல் தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இனி இ - பாஸ் விண்ணப்பிக்க தேவையில்லை. அதேபோல் பேருக்கு போக்குவரத்து தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் 4 முக்கியமான தளர்வு, முதல்வர் பழனிசாமி அதிரடி

    தமிழகத்தில் எல்லோரும் எதிர்பார்த்த லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் உடனான ஆலோசனைக்கு பின் முதல்வர் லாக்டவுன் தளர்வுகளை அறிவித்து இருக்கிறார். தளர்வுகளுடன் தற்போது லாக்டவுன் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இதில் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். மக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் முழு விபரம் இங்கே அளிக்கப்பட்டுள்ளது.

    அதிரடி அனுமதி தரப்பட்ட விஷயம்

    அதிரடி அனுமதி தரப்பட்ட விஷயம்

    இ - பாஸ் : மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் இ பாஸ் அவசியம்.

    பேருக்கு போக்குவரத்து: மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, தொடங்கப்படுகிறது. 1ம் தேதி முதல் தொடங்கப்படும்.

    வழிபாடு: அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்கள் தரிசனம் இரவு 8.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

    மெட்ரோ: பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இயங்கும்.

    ஞாயிறு: ஞாயிறு லாக்டவுன் நீக்கப்படுகிறது.

    இதுதான் தமிழக அரசு அறிவித்த முக்கியமான தளர்வுகள் ஆகும்.

    போக்குவரத்து எப்படி

    போக்குவரத்து எப்படி

    ரயில்: மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும் இயங்கும்.

    விமானம்: சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. மற்ற விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

    வேறு சந்தேகம்

    வேறு சந்தேகம்

    இது போக வேறு சில தளர்வுகள் அமலுக்கு வருகிறது.

    கடைகள்: வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயக்கும். இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

    ஹோட்டல்: உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    நிறுவனங்கள்: தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    தங்கும் இடங்கள்: ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    சினிமா போன்ற விஷயங்கள்

    சினிமா போன்ற விஷயங்கள்

    ஜிம்: உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அனுமதி.

    அரசு அலுவலகம்: வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. செப். 1ஆம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்.

    சினிமா: திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

    தடை செய்யப்பட விஷயங்கள்

    தடை செய்யப்பட விஷயங்கள்

    பள்ளிகள்: பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.

    தியேட்டர்: திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

    சர்வதேச விமானம்: சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

    ரயில்: புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து

    கூட்டம்: மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+