"ஜாதிதான்.. பிடிச்சா இரு.. இல்லை போ".. லீக்கான ஆடியோ.. "எடப்பாடி டீம்".. இப்படி வசமாக சிக்கிட்டாரே!
சென்னை: ஜாதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் பேசுவதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக மூத்த தலைவரும் , முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாதி குறித்து பேசினார். அவரின் பேச்சு தமிழ்நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ''நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் தான்.
அடுத்து எங்கள் சாதியை சேர்ந்தவர் தான் முதல்வராக முடியும் . ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க முடியும்.. இரண்டு கத்திகள் இருக்க முடியாது.. எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர்" என்று பேசினார்.
இவரின் இந்த ஜாதி ரீதியான பேச்சு பெரும் சர்ச்சையானது. இந்த பேச்சை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் தற்போது வெளியாகி உள்ள ஆடியோ ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆடியோ
ஜாதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் பேசுவதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்தவர் களரி தியாகராஜன். இவர் திருப்புல்லாணி ஒன்றியத்தின் அதிமுக துணை செயலாளர் களரி தியாகராஜன். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான இவர் பேசியதாக கூறப்படும் ஆடியோதான் தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ் தரப்பினரை இந்த ஆடியோ கொதிப்பில் ஆழ்த்தி உள்ளது.

பெரிய ஜாதி
அந்த ஆடியோவில், என்ன பெரிய ஜாதி ஜாதி என்று சொல்கிறீர்கள். செங்கோட்டையன் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அம்மா இருந்த காலத்திலேயே அவர் பெரியவர். ஜாதிதான் அரசியல். மதுரையில் இருந்து கமுதி வரை அவர்தான். அங்கே என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத்தான் தெரியும். என்ன ஜாதி ஜாதி என்று பேசுகிறீர்கள்? இஷ்டம் இருந்தால் இருங்கள்.

அதிமுக எடப்பாடி
இனி அதிமுகவில் எடப்பாடி ஜாதிதான். இஷ்டம் இருந்தால் இருங்கள்.. இல்லையென்றால் அதிமுகவை விட்டு செல்லுங்கள். அடுத்து எடப்பாடிதான் அதிமுக. அவர்தான் அடுத்த முதல்வர். அவர் ஜாதிதான் முதல்வர். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இருங்கள். இல்லையென்றால் அரசியலை விட்டே சென்று விடுங்கள். நிறைய கட்சி இருக்கிறது. அதில் ஒன்றில் சேருங்கள்.

இப்படித்தான் இருக்கும்
அதிமுகவில் இப்படிதான் இருக்கும். பிடிக்கவில்லை என்றால் சென்றுவிடுங்கள். உங்களை யாரும் பிடித்து வைத்துக்கொள்ளவில்லை என்று அவர் பேசும் வீடியோ சர்ச்சையாகி உள்ளது. நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே அதிமுகவில் குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும்தான் அங்கீகாரம் இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு குற்றஞ்சாட்டி வந்தது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த ஆடியோ அமைந்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications