இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக இந்த முறை 168 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 179 தொகுதிகளில் போட்டியிட்டது அதிமுக.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு - 27 தொகுதிகள், பாமகவுக்கு - 18 தொகுதிகள், அமமுகவுக்கு - 11 தொகுதிகள், ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக, பாமக, அமமுகவுக்கு மொத்தமாக 56 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 178 தொகுதிகளில், மற்ற கட்சிகளுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், அதிமுக 168 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.
அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் சில கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இதன் முடிவில் அந்த விவரங்களை தெரிவிப்போம்" என்றார்.
அதிமுக கூட்டணியில் இன்னும் ஜி.கே.வாசனின் தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமமுக, புரட்சி பாரதம், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகளும் வேகமாக நடந்து வருவதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ல் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டது. பாமக 23 (மாம்பழம்), பாஜக 20 (தாமரை) தொகுதிகளில் போட்டியிட்டன.
மற்ற கட்சிகள் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையிலேயே போட்டியிட்டன. தமாகா (6), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1), மூவேந்தர் முன்னேற்ற கழகம் (1), அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் (1), பசும்பொன் தேசிய கழகம் (1), பெருந்தலைவர் மக்கள் கட்சி (1), புரட்சி பாரதம் (1) ஆகிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டன. மொத்தமாக 191 பேர் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டனர். 179 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, 66 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications