ஒன்னு சேரலையே.. ஊரை தெரிஞ்ச மகன்.. உலகம் புரிஞ்ச தந்தை..! மிஸ்டர்.பள்ளி தொகுதியில் இப்படி பஞ்சாயத்தா?
சென்னை: தமிழகத்தின் மிகப் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவரின் வாரிசு தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கி இருக்கும் நிலையில், தந்தை கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் மகன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் தென் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர். மாநில கட்சி ஒன்றின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர் தொடர்ந்து அக்கட்சித் தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து தனி கட்சியை தொடங்கினார்.

மேடைகளிலும் சரி, தொலைக்காட்சிகளிலும் சரி செய்தியாளர் சந்திப்பு என்றாலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தாலும் கம்பீரக் குரலோடு அவரது இலக்கியம் சார்ந்த ஆவேச பேச்சுக்கு தமிழ்நாடு அரசியல் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உண்டு.
அரசியல் தலைவர்: ஆரம்பத்தில் பெரிய சக்தியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர், தொடர்ந்து பல தேர்தல்களை சந்திக்காமல் புறக்கணித்து, மீண்டும் தேசிய கட்சி ஒன்றோடு கூட்டணி அமைத்தார். அந்தக் கட்சி ஆட்சி அமைத்த போதும் கூட்டணியில் இருந்து விலகிய அவர் மீண்டும் தனது தாய்க் கழகத்தோடு கரம் கோர்த்து தற்போது அரசியல் களமாடி வருகிறார். அரசியல் களம் மட்டுமல்லாது மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து போராட்டம் பல கண்ட அவர் தற்போது தனது மகனை அரசியல் களத்தில் நிறுத்தி இருக்கிறார்.
வாரிசு வேட்பாளர்: தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள முக்கியமான மரியாதை சொல்லை முதன்மை பெயராகக் கொண்ட தொகுதியில் போட்டியிடும் அந்த அரசியல் தலைவரின் வாரிசு தந்த தந்தையைப் போலவே உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதனால் அவர் போட்டியிடும் தொகுதியில் உள்ள முக்கிய கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவரின் வாரிசு பிரச்சாரத்திற்கு போகும்போது கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மகனை கண்டித்த தலைவர்: வாரிசு வேட்பாளரின் நடவடிக்கைகள் குறித்து தந்தையிடம் சொல்ல அவர் தனது மகனை அழைத்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது தனது தந்தை கலந்து கொள்ளும் பிரச்சார நிகழ்ச்சிகளிலும் வேட்பாளராக நிற்கும் வாரிசு கலந்து கொள்ளாமல் புறக்கணித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தந்தை உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் பல நேரங்களில் பல சங்கடங்களை சந்திக்க வேண்டி இருந்த நிலையில் தற்போது மகனும் அதே பாணியை கடைப்பிடிப்பது நல்லதல்ல என குடும்பத்தினர் அறிவுரை சொன்னதாக கூறப்படுகிறது.
என்ன தான் பிரச்சினை?: அரசியலுக்கு அழைத்து வந்துவிட்டு தற்போது சிறு பிள்ளையைப் போல தன்னை கண்டிப்பதா என்ற ஆத்திரத்திலேயே தந்தை கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை வாரிசு வேட்பாளர் கண்டுகொள்ளாமல் கழன்று கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடியே இருவரும் தனித்தனி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகவும் கட்சிக்குள்ளும் தந்தை மகனுக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லை என அவர்கள் சார்ந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறினாலும் ஏதோ ஒரு பிரச்சனை நிச்சயம் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
திமுக VS அதிமுக.. சென்னையில் 11 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டி.. தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு! -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்!












Click it and Unblock the Notifications