Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் ஆப்ஷன்.. CM பதவிக்கு சான்ஸே இல்லை.. கறாராக சொன்ன எடப்பாடி.. அடம் பிடிக்கும் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகம் (TVK) நிறுவனர் விஜய் மற்றும் அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) இடையே எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது பெரிய தடையைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைந்தால், விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

TVK Vijay

அடம் பிடிக்கும் விஜய்

கடந்த வாரம் சென்னையில் இது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதில் ஒரு முக்கியமான படியாக இந்த பேச்சுவார்த்தை கருதப்பட்டது.

விஜய்யின் வளர்ந்து வரும் அரசியல் செல்வாக்கு, இளைஞர்கள் மத்தியில் அவருக்குள்ள ஈர்ப்பு மற்றும் அவரது நேர்மையான இமேஜ் ஆகியவை நகர்ப்புற மற்றும் முதல் முறை வாக்காளர்களை கவர உதவும் என எடப்பாடி பழனிசாமி நம்புகிறார்.

இறங்கி வராத

ஆனால், தமிழக வெற்றி கழகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள், விஜய் எந்த கூட்டணியிலும் இரண்டாம் நிலை இடத்தை ஏற்க தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன. தனது கட்சி மற்றவர்களுடன் கூட்டணி வைத்தால், முதலமைச்சர் வேட்பாளராகத் தான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவர் மற்றொரு தலைவரின் லட்சியத்திற்கு துணை நிற்பதாகக் கருதப்பட விரும்பவில்லை; அவர் தனது சொந்த அரசியல் பாதையை உருவாக்க விரும்புகிறார், என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறியது. மறுபுறம், எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பவன் கல்யாண் போல நீங்கள் துணை முதல்வராக வாருங்கள் என்று விஜயிடம் எடப்பாடி தரப்பு கூறி உள்ளது.

அதிமுக தமிழ்நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாகவும், ஒரு நிலையான வாக்காளர் தளத்தையும் கொண்டுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டி.. நீங்கள் புதிய கட்சி அதனால் இறங்கி செல்லுங்கள் என்று விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளாராம். ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜயுடன் கூட்டணி குறித்து பேச வேண்டும் என ஈபிஎஸ்-ஐ அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

அதிமுக கட்சி வட்டாரங்கள் மூலம் கிடைத்த தகவலின்படி, அமித் ஷா தனிப்பட்ட முறையில் ஈபிஎஸ்-க்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். விஜயை என்.டி.ஏ கூட்டணியில் சேர்ப்பது மிக முக்கியமான பணி என்று அமித் ஷா அப்போது வலியுறுத்தியுள்ளார்.

அமித் ஷா - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

ஏதாவது செய்யுங்கள்.. எந்த offer வேண்டுமானாலும் கொடுங்கள்.. விஜயை சம்மதிக்க வைத்து, தமிழக பாஜக, அதிமுக, மற்றும் TVK ஆகிய மூன்று கட்சிகளும் வரும் தேர்தலில் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யுமாறு ஈபிஎஸ்-க்கு அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் உள்ள உள்ளூர் பிரச்சனைகளில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, இரு தலைவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்குமாறும் அமித் ஷா, ஈபிஎஸ்-ஐ கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+