கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்
சென்னை: தவெக யாருடனும் கூட்டணிக்கு செல்ல முடியாத வகையில் விஜய்யை அந்த இருவர் தடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் தொகுதிக்கு செலவு செய்ய வேண்டிய பணத்திற்கு எங்கே செல்வது என கேள்வி எழுப்பிய நிர்வாகிகள், பணம் செலவிட முடியாத சூழலால்தான் கூட்டணிக்கு செல்வதே சரி என கருத்து கூறியிருக்கிறார்களாம்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையாகும். இந்த நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஓரளவு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டது.

ஆனால் தவெகவை பொருத்தமட்டில் கூட்டணிக்கு வருமாறு பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பல்வேறு பேட்டிகளில் அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் திமுக கூட்டணி பலமாக இருப்பதாகவும் என்டிஏ கூட்டணிக்கு கூடுதல் பலம் தேவை என பாஜக கருதியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காகதான் கரூர் விவகாரத்தில் விஜய்யிடம் விசாரணை முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டாலும் அவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் வரவழைத்தது என்கிறார்கள்.
அப்போது டெல்லியில் வைத்தே NDA கூட்டணியில் சேர விஜய்க்கு அழுத்தமும், கவர்ச்சிகரமான ஆஃபர்களும் கொடுக்கப்பட்டதாம். இந்த நிலையில் கூட்டணிக்கு செல்வது குறித்து விஜய் தனது கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய போது 90 சதவீதம் பேர் கூட்டணிக்கு போகலாம் என்றார்களாம்.
ஆனால் விஜய்யுடன் உள்ள சில முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக்கு சென்றால் முதல்வர் கனவு பகல் கனவாகிவிடும். அது போல் கட்சியின் செல்வாக்கும் மற்றவர்களுக்கு தெரியாது. இந்த தேர்தலில் தனித்து நின்று நமது வாக்கு சதவீதத்தை அதிகரித்தால்தான் அடுத்தடுத்த தேர்தல்களில் நமது பலத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும் என்கிறார்களாம்.
இதை விட பெரிய பிரச்சினை என்னவெனில், தனித்து 234 தொகுதிகளிலும் தவெக போட்டியிட்டால் ஒரு தொகுதிக்கு நிச்சயம் பல லட்சங்கள் அல்லது கோடிகளில் செலவிட வேண்டுமே, அந்த பணத்திற்கு எங்கே போவது என்பதும் பலரது கவலையாக இருக்கிறது.
ஆனாலும் ஜான் ஆரோக்கியசாமியும், ஆதவ் அர்ஜுனாவும் தனித்து போட்டியிட வேண்டும் என கூறி விஜய்க்கு அழுத்தம் கொடுத்து வருவதால் அவரால் கூட்டணி குறித்து எந்த தீர்க்கமான முடிவையும் எடுக்க முடியாமல் திணறுகிறார் என்கிறார்கள்.
அரசியல் களத்தில் இவை அனைத்தும் யூகங்களாகவும், ஒருவரை ஒருவர் வீழ்த்தச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளாகவுமே பார்க்கப்படுகின்றன. இதுகுறித்து தவெக நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில்,"விஜய் கூட்டணியை இறுதி செய்துவிட்ட நிலையிலும் அந்த இருவரும் அவரை தடுத்து நிறுத்துவதால் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவோர் கோடிக்கணக்கில் செலவு செய்வது எப்படி என்று திணறி வருகிறார்கள்" என்கிறார்கள்.
இந்த நிலையில் யாருடனும் கூட்டணி பேசவில்லை என தவெக சார்பில் அறிக்கை வெளியானது. இதுகுறித்து சி.டி.ஆர். நிர்மல் குமார் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வதந்திகளை நம்ப வேண்டாம்!
சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.
பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! வாய்மையே வெல்லும்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
10 நாள்தான் டைம்! வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க! நீலாங்கரை வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அறிவுரை -
எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டார்.. தவெகவில் கருப்பு ஆடு.. ஆதவ் அர்ஜுனா நேரடி குற்றச்சாட்டு! -
அனுமதி கிடைத்தாலும்.. பிரச்சாரத்தை ரத்து செய்யும் விஜய்.. அதிர்ச்சியில் தவெக.. ரொம்ப மோசம்ப்பா! -
குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர் -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர் -
விஜய் அட்டைக்கத்தி.. காற்றடித்தால் கதை முடிஞ்சுது.. திருச்சி கிழக்கில் உதயநிதி தக் -
கன்னியாகுமரியில் இன்று விஜய் அதிரடி! மதியம் 2 மணிக்கு தொடங்கும் மெகா பிரசாரம்.. ரூட் மேப் இதோ -
விஜய்க்கு கூடிய கூட்டம்.. வாயை பிளந்த கட்சிகள்.. ரியாலிட்டி என்ன? விசாரித்த ஸ்டாலின்! பின்னணி -
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது! சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்! அடுத்து ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications