314 கி.மீ. தூரம்! 6 முதல் 7 மணி நேரம்! முகம் முழுக்க சிரிப்புடன்! தஞ்சைக்கு போலீஸ் வேனில் உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷா மீது அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலீஸார், அவரை நீலாங்கரை வீட்டிலிருந்து தஞ்சாவூர் வரை போலீஸ் வாகனத்திலேயே அழைத்துச் செல்கிறார்கள். கிட்டதட்ட சென்னையில் இருந்து தஞ்சைக்கு செல்ல 7 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்.

இதனிடையே ஆங்காங்கே திமுகவினர் போராட்டம் நடத்தி வருவதால் உதயநிதியை அழைத்து செல்லும் போலீஸ் வாகனம் மேலும் தாமதமாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

udhayanidhi arrest

சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு 314 கி.மீ. தூரம் உள்ளது. கிட்டதட்ட இந்த தூரத்தை சென்றடைய குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். நீலாங்கரையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, வழியாக புதுவை, கடலூர் சென்று அங்கிருந்து வடலூர், சேத்தியாத்தோப்பு வழியாக போலீஸ் வாகனம் செல்லும்.

அங்கிருந்து அணைக்கரை, சோழபுரம், கும்பகோணம் சென்று இறுதியாக தஞ்சையை அடையலாம். உதயநிதி கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழிகளில் உதயநிதி வேன் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

இதனால் அவரது வேன் தஞ்சாவூர் செல்வதில் மேலும் தாமதமாகும் என தெரிகிறது. இந்த 6, 7 மணி நேரமும் உதயநிதி உட்கார்ந்தபடியே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் வழியெங்கும் திமுகவினர் கூடியுள்ளனர். அவர்களை உதயநிதி கையசைத்து கலைந்து செல்லும்படி கூறி வருகிறார்.

நடந்தது என்ன?

தஞ்சாவூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டர்கள் திரிஷாவின் பெயரை சொல்ல அதற்கு உதயநிதி இரட்டை அர்த்தத்தில் ஒரு வார்த்தையை கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இதை கண்டித்து தவெகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கெல்லாம் உதயநிதியின் வீட்டில் போலீஸார் குவிந்தனர். அப்போது 9 பிரிவுகளின் கீழ் உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவரை கைது செய்ய வந்திருக்கிறோம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

உதயநிதி மீது மொத்தம் ஒன்பது பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை

BNS 196- பொது அமைதியை கெடுத்தல்

192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம்

79- பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்

352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல்

296(b) ஆபாசமாக பேசுதல்

351(2)- மிரட்டல்

BNS 61- குற்றவியல் சதி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4)

தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+