கடனில் கமல்.. மிடில் கிளாஸ் டிடிவி.. வருமானமில்லாத சீமான்.. ஸ்டாலினும் ஷாக்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஸ்டார் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெளியிட்டு இருக்கும் சொத்து விவரங்கள், கடன் விவரங்கள் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.. கிட்டத்தட்ட தமிழகத்தின் ஸ்டார் வேட்பாளர்கள் பலரும் கடனில் இருக்கிறார்கள்.. அல்லது அவர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட மூத்த அரசியல் தலைவர்கள் எல்லோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இவர்கள் தங்களின் வேட்பு மனுவோடு சேர்த்து தங்களின் சொத்து விவரங்கள், கடன் விவரங்களையும் வெளியிட்டனர். இந்த விவரங்கள்தான் தற்போது வெளியாகி உள்ளன.

ஸ்டாலின்
இந்த விவரத்தின்படி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பின் வரும் சொத்துக்கள் உள்ளன. ஸ்டாலினின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் சொத்து உயர்ந்தாலும் பெரிய அளவில் இதில் மாற்றம் ஏற்படவில்லை.
- அசையும் சொத்துக்கள் - ரூ.4 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 792 உள்ளது.
- அசையா சொத்துக்கள் - ரூ.2 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 410 உள்ளது.
- ஸ்டாலின் மனைவி துர்காவிடம்
- அசையும் சொத்துக்கள் - ரூ.30 லட்சத்து 52 ஆயிரத்து 854 உள்ளது.
- அசையா சொத்துக்கள் - ரூ.1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 283 உள்ளது.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி குறைந்துள்ளது. அவரிடம் பின் வரும் சொத்துக்கள் உள்ளன. முதல்வரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. முன்பு வெறும் எம்எல்ஏவாக இருந்த போது இருந்த சொத்துக்களில் 1.5 கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது.
- அசையும் சொத்துக்கள் - ரூ.2.01 கோடி உள்ளது.
- அசையா சொத்துக்கள் - ரூ. 4.68 கோடி 410 உள்ளது.
- கடன் - ரூ.29.75 லட்சம் கடன் உள்ளது.

ஓ.பி. எஸ்
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமிடம் பின் வரும் சொத்துக்கள் உள்ளன. இவர் தன்னிடம் நிலமே இல்லை என்று கூறியுள்ளார்.
அசைய சொத்துக்கள் - அவரின் பெயரில் நிலம், வீடு என்று அசையா சொத்துகள் எதுவும் இல்லை
- அசையும் சொத்துகள் - ரூ.61 லட்சத்து 19 ஆயிரத்து 162 உள்ளது
- கடன் - ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்து 411 கடன்

சீமான்
சுவாரசியமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனக்கு 1000 ரூபாய்தான் வருட வருமானம் என்று கூறிஉள்ளார். தனக்கு சினிமா, விவசாயம் தொழில், இதில் வருமானம் இல்லை என்று கூறியுள்ளார்.
அசையும் சொத்து - ரூ.31 லட்சத்து 6 ஆயிரத்து 500 உள்ளது
கடன் - வங்கிக்கடன் ரூ.6 லட்சம்

உதயநிதி
உதயநிதி ஸ்டாலினிடம் பின் வரும் சொத்துக்கள் உள்ளன.
அசையும் சொத்துக்கள் - ரூ.21 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 650 உள்ளது
அசையா சொத்துக்கள் - ரூ.6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 உள்ளது

டிடிவி
டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு பின்வறுமாறு. டிடிவி தினகரன் கிட்டத்தட்ட ஒரு அப்பர் மிடில் கிளாசுக்கு நிகரான சொத்து மதிப்பை கொண்டுள்ளார்.
அசையும் சொத்துகள் - 19,18,485 ரூபாய் உள்ளது
அசையா சொத்துகள் - 57,44,008 ரூபாய் உள்ளது

கமல்ஹாசன்
கமல்ஹாசனுக்கு பின் வரும் சொத்துக்கள் உள்ளன. இவரிடம் பட தோல்விகள், இழப்புகளால் நிறைய கடன் உள்ளது .
அசையா சொத்துகள் - ரூ.131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் உள்ளது
அசையும் சொத்துகள் - ரூ.45 கோடியே 9 லட்சத்து ஆயிரத்து 476 உள்ளது
கடன் - கடன் ரூ.49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 உள்ளது

ஒற்றுமை
கிட்டத்தட்ட தமிழகத்தின் ஸ்டார் வேட்பாளர்கள் பலரும் கடனில் இருக்கிறார்கள்.. அல்லது அவர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. பலருக்கு சொத்து மிக மிக குறைவாக இருக்கிறது. அதோடு கடந்த வருடங்களில் இவர்களின் வருமானமும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!









Click it and Unblock the Notifications