என்னாது டீ செலவு மிச்சமா?.. எங்களுக்கு டீசல் செலவு மிச்சம்!.. அண்ணாமலை Vs ஆளூர் ஷாநவாஸ்!
சென்னை: என்னாது டீ செலவு மிச்சமா, எங்களுக்கு டீசல் செலவு மிச்சம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
தமிழ்ப் புத்தாண்டையொடடி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனைத்து கட்சியினருக்கு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு தீர்மானம், 7 தமிழர் விடுதலை தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்களை ஆளுநர் ஆர். என். ரவி நிறைவேற்றாததால் அவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டோர் அறிவித்தனர்.

பாமக புறக்கணிப்பு
அது போல் பாமகவும் தேநீர் விருந்தை புறக்கணித்தது. அது போல் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அறிவித்தது. இதையடுத்து ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்த தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

தேநீர் விருந்து
ஆளுநர் தேநீர் விருந்தை திமுக அரசு, திமுக கூட்டணி கட்சிகள், பாமக உள்ளிட்டவை புறக்கணித்தது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். அனைத்தும் மக்களின் வரிப்பணம்தான். மக்களின் வரிப்பணம் மிச்சமாகி இருக்கிறது. ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக நடைபெற்று வரும் மரபு என்றார்.

டீசல் செலவு மிச்சம்
டீ செலவு மிச்சம் என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலையின் விமர்சனத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று வர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும்.

உரிமை பிரச்சினை
தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக் கூடாது என ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார். டீ செலவு மிச்சம் என அண்ணாமலை சொன்னதற்கு திமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகள் பதிலடி கொடுத்து வருகிறார். சமூகவலைதளங்களிலும் இந்த கட்சியின் நிர்வாகிகளுக்குள் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
-
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications