விஜய்க்கு கொள்கையே கிடையாது.. ஆளுநருடன் தவெக செய்த சமரசம்.. கொந்தளிக்கும் ஆளூர் ஷா நவாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்க்கு கொள்கையே கிடையாது என்று ஆளூர் ஷா நவாஸ் விமர்சித்துள்ளார். ஆளுநருடன் தவெக செய்து கொண்ட சமரசம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தமிழ்த்தாய் வாழ்த்தை 3வதாக மட்டுமே பாடுவேன் என்று சொல்வதில் வந்து நிற்பதாகவும் ஆளூர் ஷா நவாஸ் சாடியுள்ளார்.

தவெக ஆட்சி அமைத்து 2 மாதங்களே ஆகி இருக்கும் நிலையில், கூட்டணியில் உள்ள விசிகவில் இருந்தே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆளுநர் உடனான சமரசம், மேகதாது விவகாரத்தில் விஜய்யின் மவுனம், நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான தமிழக போலீசாரின் தாக்குதல், நீட் விவகாரத்தில் விஜய்யின் அமைதி என்று ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Aloor Shanavas

இதுகுறித்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் அளித்துள்ள பேட்டியில், தவெக ஆட்சி அமைத்த மேடையிலேயே வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போதே ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளான எல்லோரும் இப்படியான விஷயங்கள் நடக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம். சட்டசபை கூடும் போது மரபுப்படி நடக்க வேண்டும் என்று வார்னிங் கொடுத்தோம்.

ஆனால் சட்டமன்றம் கூடும் போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட பின் உடனே தேசிய கீதம் பாடப்பட்டது. 2வது முறையாகவும் தேசிய கீதம் பாடப்பட்டது. இது முன்பு இருந்த ஆளுநர் ரவியின் கோரிக்கை.. இவர்கள் எடுத்த உடன் சமரசம் ஆகிவிட்டார்கள். அது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விவகாரம் வரை வந்து நிற்கிறது. அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் வந்து இதுதான் விதி என்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்திலேயே இப்படி சொல்கிறார்கள். தமிழ்நாட்டை கொண்டு வந்த எங்கு போய் விட்டுள்ளீர்கள்.. ஆளுநரோடு தவெக செய்த சமரசம், தமிழ்நாட்டின் உரிமையில் வந்து தலையெழுத்தாக விடிந்திருக்கிறது. திமுக அன்று 2 முறை தேசிய கீதம் பாடி இருந்தால், சும்மா விட்ருப்போமா?

அன்றைய அரசு ஆளுநருடன் மல்லுக்கட்டியது? இதெல்லாம் ஏன்.. மாநில உரிமை மீதான பிடிப்பு அது.. அந்த உரிமை தவெகவிடம் மிஸ்ஸாகிவிட்டது. இப்போது எப்படி நாம் கேட்காமல் இருக்க முடியும்.. இது இந்த அரசின் முடிவா என்றால் இல்லை.. ஏனென்றால் இந்த அரசுக்கு அப்படியொரு கொள்கை கிடையாது. தவெக திராவிட இயக்க கொள்கையை தான் பின்பற்றுகிறோம் என்கிறார்கள்.

தேசிய கீதத்தை 2 முறை பாடிக் கொள்ளலாம் என்று முதல்வர் விஜய் முடிவு எடுத்தாரா? அல்லது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முடிவு எடுத்தாரா? யாருடைய கோரிக்கை அது.. அது ஆளுநரின் கோரிக்கை.. கடந்த ஆட்சியில் இருந்த ஆளுநரின் கோரிக்கை, இந்த ஆட்சியில் அழுத்தமாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+