பாஜகவின் கைப்பாவையாக தவெக.. திருமாவுக்கு நெருடல்.. ஆளுர் ஷாநவாஸ் கருத்தால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. அரசியல் கட்சிகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் பல கட்சிகள் வெளியேறிவிட்டன. விசிக நிர்வாகிகள் மட்டும் கூட்டணி விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை கூறி வருகிறார்கள். பாஜகவை பார்த்து தமிழக அரசு பயப்படவில்லை என அமைச்சர் வன்னி அரசு கூறியிருந்தார். பாஜகவின் கைப்பாவையாக தவெக இயங்குவதாகவும், திமுக இல்லாமல் கூட்டணி அமைக்க முடியாமல் காங்கிரஸ் திணறுவதாக ஆளுர் ஷா நவாஸ் கூறியுள்ளார்.

விசிக முதன்மை செயலாளர் ஆளுர் ஷா நவாஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "தலைமை செயலாளர் என்பவர் ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் முக்கியமான அதிகாரியாவார். அவர்தான் அதிகாரிகளுக்கு தலைமையே. போலீஸ் என்ன செய்ய வேண்டும், கலெக்டர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வார். அதிகாரிகளை மாற்றுவது சாதாரண விஷயமல்ல. ஆட்சியமைத்து எல்லோரையும் மாற்றிய தவெக ஏன் தலைமை செயலாளர் சாய்குமாரை மாற்றவில்லை.

Aloor Shanawas

பாஜகவின் கைப்பாவையாக தவெக

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சாய்குமாருக்கு கால நீட்டிப்பு செய்துள்ளனர். இதுவெல்லாம் நமக்கு மறைமுகமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டியதில்லை என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டை மறைமுகமாக பாஜக தான் ஆள்கிறது. பாஜகவின் கைப்பாவையாக தவெக உள்ளது. தவெகவுடன் பயணிப்பதில் எங்கள் தலைவர் திருமாவளவனுக்கு நெருடல் உள்ளது.

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் டம்மியாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் மீது உணர்வுள்ள அதிகாரிகளை டம்மியாக்குவது ஏன். நான் இதை மிகவும் தெளிவாக சொல்கிறேன். அதிகாரிகளின் மாற்றம் இயல்பானது. திமுக ஆட்சியில் நியமித்த உயரதிகாரிகள் டம்மியாக்கப்பட்டு, பாஜக ஆட்சியில் நியமித்த தலைமை செயலாளர் நியமிக்கப்படுகிறார் என்றால் என்ன அர்த்தம். அதுதான் தற்போது மாணவர் போராட்டம் வரை தொடர்கிறது. ராகுல் காந்தி எவ்வளவோ முட்டி மோதி பார்த்தார்.

காங்கிரஸ் திணறல்

தமிழகத்தை போல வேறு எங்காவது இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டதா. திமுக இல்லாமல் உங்களால் கூட்டணி அமைக்க முடியுமா. ஏதாவது தெளிவு இருக்கிறதா. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமைந்துவிட்டதா. தவெக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமையவில்லை. இதுதான்காங்கிரஸ் நிலைமை. கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகிறார்கள். திமுக இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் கூட்டணி அமைக்க முடியவில்லை" என்றார். ஷா நவாஸின் இந்த கருத்து தவெக, திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+