நான் திமுககாரனா? சீறிய திருமாவளவன்.. பட்டென உள்ளே புகுந்த திமுக.. வந்து விழுந்த ஸ்டேட்மென்ட்.. ப்பா!
சென்னை: நான் திமுககாரனா என்று கேட்டு செய்தியாளர்களிடம் கோபம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவனுக்கு ஆதரவாக தற்போது திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது ஒரு செய்தியாளர், நீங்க திமுககாரர் என்று கூறி விமர்சனம் வைத்தார்.

இதனால் கோபம் அடைந்த திருமாவளவன், நான் திமுக காரனா என்று கோபமாக கையை நீட்டி பேசினார். அவரை எதிர்த்து பேசிய இன்னொரு செய்தியாளர்.. என்ன கை நீட்டி பேசுறீங்க என்று கேட்டார். அதற்கு என்ன.. உங்க முன்னாடி கையை கட்டி பேச வேண்டுமா? கையை கட்டிக்கொண்டு நிற்க வேண்டுமா என்று கேட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது நிலையில், அது தொடர்பாக திருமாவளவன் விளக்கம் அளித்து இருந்தார். அதில், #வேங்கை_வயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைமை மீதான #நம்பகத்_தன்மையைச் சிதைக்க வேண்டுமென்பதே அந்த கேள்வியில் இழையோடும் உள்நோக்கமென புலப்படுகிறது.
பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று, கூட்டணி கணக்குகளை முன்னிறுத்தாமல்,
நேர்மைத் திறத்தோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றும் அதன் தலைமையை, ஒரு குதர்க்கமான கேள்வியின் மூலம் சிறுமைப்படுத்தும் நோக்கமே அதில் வெளிப்படுகிறது.

* திமுக - விசிக உறவில்
விரிசலை ஏற்படுத்திட வேண்டுமென்பதோ;
* விசிக'வின் தனித்துவத்தைக் கொச்சைப்படுத்துவதோ;
* விசிக'வின் தலைமையைப் பலவீனப்படுத்த வேண்டுமென்பதோ;
* விசிக, தலித் மக்களுக்கு எதிராகவுள்ளது என்கிற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்பதோ;
* திமுக, தலித்துகளுக்கு எதிராக உள்ளது என்று தெரிந்தும் விசிக மற்றும் அதன் தலைமை, திமுகவுக்கு ஆதரவாக அதனைப் பாதுகாக்கவே முயலுகின்றன என்கிற ஒரு பொய்யான கருத்துருவாக்கத்தைச் செயவதோ;
அந்தக் கேள்வியின் அற்பமான
உள்ளீடாக இருக்கலாம்.
ஆனால், அந்தக் கேள்வி பாதிக்கப்பட்ட வேங்கைவயல் மக்களின் மீதான கரிசனம் இல்லை என்பது மட்டும்தான் இதில் உணர வேண்டிய உண்மை நிலையாகும், என்று குறிப்பிட்டார்.
அதோடு என்னிடம் கேள்வி கேட்ட தொலைக்காட்சி அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு கண்டனம் என்கிற பெயரால், நமது தோழர்கள் யாரும் நாகரிக வரம்பு மீறல் செய்வது கூடாது.
அது எவ்வகையிலும். ஏற்புடையதல்ல.
நமது பெயரில் நாகரிகக் கேடர்கள் திட்டமிட்டு ஊடுருவி ஏதேனும் வரம்புமீறிப் பேசவும், பொது வெளியில் நமக்கு எதிரான ஒரு பிம்பத்தை உருவாக்கிடவும் முனைவார்கள்.
அதற்கு நாம் இடம்தரக் கூடாது.
எனவே, தோழர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இதனைக் கடந்து செல்லவும், என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் திருமாவிற்கு ஆதரவாக திமுக களமிறங்கி உள்ளது.

திமுக ஆதரவு: இது தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், அண்ணன் திருமாவளவன் எம்பி அவர்கள் எப்போதும் ஊடகவியலாளர்களை ஒருமையில் பேசியது இல்லை, பேசுவதும் இயல்பிலேயே இல்லை!
உள்நோக்கத்தோடு கேள்வி கேட்ட செய்தியாளரை உள்நோக்கம் கொண்டு கேள்வி கேட்காது ஆதாரத்தோடு கேளுங்கள் என சுயமரியாதையோடு அண்ணன் திருமா அவர்கள் பேசியது மிக மிக சரியே!, என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications