உண்மையான பக்தி.. கடவுள் நம்பிக்கை குறித்து நடிகர் சிவக்குமார் வெளியிட்ட வீடியோவை கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நானும் முருகன் பக்தன் தான் - நடிகர் சிவகுமார் | Actor sivakumar latest video

    சென்னை: தான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்றும், முருக பக்தன் என்றும் விளக்கம் அளித்துள்ள நடிகர் சிவக்குமார், உண்மையான பக்தி என்பது அடுத்தவரை நேசித்தல், அவங்களை சமமாக மதித்தல் ஆகியவை தான் என்று கூறியுள்ளார்.

    சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன் சூர்யா மற்றும் குடும்பத்தினர் பற்றியும் அவர்களின் கடவுள், மதம் சம்பந்தமான நம்பிக்கைகள் குறித்து செய்திகள் பல்வேறு வகைகளில் வெளியாகி வருகின்றன.

    அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சிவக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில் சிவக்குமார் கூறியிருப்பதாவது:

    சிவக்குமார் விளக்கம்

    சிவக்குமார் விளக்கம்

    நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா?. சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகன், லக்ஷ்மி, சரஸ்வதி, காமாட்சி, மீனாக்ஷின்னு சாமி கும்பிடுறவங்க நம் நாட்டில் பல கோடி பேர் இருக்காங்க. அல்லாவையும், ஏசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்காஙக.

    கடவுளுக்கு வடிவம் இல்லை

    கடவுளுக்கு வடிவம் இல்லை

    கடவுளுக்கு வடிவம் இல்லை; ஆண், பெண் என்ற பால் பேதம் இல்லை, கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம்; விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல என்று சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால், அவரே உயிர் விடும்போது ஹேராம் என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதாவது, அவர் ராமனை வணங்கியிருக்கிறார்.

    கடவுள் நம்பிக்கை உள்ளவன்

    கடவுள் நம்பிக்கை உள்ளவன்

    நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்கு போயி திருப்புகழ் மொத்தப் பாட்டையும் மனப்பாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார். நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு கொண்டு இருக்கேன்.

    உரை நிகழ்த்தி உள்ளேன்

    உரை நிகழ்த்தி உள்ளேன்

    இப்பவும் எங்க வீட்டுப் பூஜையறையில் எல்லா சாமி படங்களும் இருக்கு. இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம். அந்த மாபெரும் காவியங்களின் முழுக்கதையையும் பாடல்களோட, இரண்டு மணி நேரம் 5000 பேருக்கு முன்னாடி உரையாக நிகழ்த்தியிருக்கேன். யு ட்யூப்பில் இப்பக்கூட நீங்க அதை பார்க்கலாம்.

    சிவக்குமார் விளக்கம்

    சிவக்குமார் விளக்கம்

    உண்மையான பக்தி என்பது... அடுத்தவரை நேசித்தல், அவங்களை சமமாக மதித்தல், இல்லாதவங்க, முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவி செய்தல் இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான்; உயர்ந்த பக்திமான்! எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கிறது" இவ்வாறு சிவக்குமார் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+