வட்டியும் முதலுமா திருப்பி கொடுப்போம்.. முதல்வர் ஸ்டாலினை எச்சரித்த அமர் பிரசாத் ரெட்டி: இன்றே கைது!
சென்னை: எங்கள் கொடியை தொட்டால் உங்கள் கொடி இனி தமிழகத்தில் பறக்காது என முதலமைச்சர் ஸ்டாலினை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் எச்சரித்த அமர் பிரசாத் ரெட்டி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. அவரது வீட்டுக்கு அருகில், சுமார் 50 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஜகவினர் அந்த 50 அடி உயரத்திலுள்ள பாஜக கொடிக்கம்பத்தை, அண்ணாமலையின் வீட்டு அருகே நட்டு வைத்திருந்தனர்.

ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் இந்த கொடிக்கம்பத்தை நட்டு வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியிலுள்ள சில அமைப்புகளும், பொதுமக்களில் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக போலீசார் ஜேசிபி வாகனத்தை வரவழைத்தனர்.
இதனால் ஆவேசமான பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால், போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது. இந்த கைகலப்பில் பாஜக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கொடிக்கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனத்தை பாஜகவினர் கற்களை கொண்டு தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.
பாஜகவினர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்த நிலையில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதோடு, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்கள் கொடியை தொட்டால் உங்கள் கொடி இனி தமிழகத்தில் பறக்காது என்பதை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.@mkstalin @arivalayam @annamalai_k
— Amar Prasad Reddy (@amarprasadreddy) October 20, 2023
"எங்கள் கொடியை தொட்டால் உங்கள் கொடி இனி தமிழகத்தில் பறக்காது என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்." என்று முதலமைச்சர் ஸ்டாலினை குறிப்பிட்டு எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் ஆவேசமாகப் பதிவிட்டிருந்தார் அமர் பிரசாத் ரெட்டி.
தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடி கம்பத்தை அகற்றி கோழைத்தனத்தில் ஈடுபடும் ஜனநாயக விரோத பாசிச தமிழக அரசு. வட்டியுடன் திருப்பிச் செலுத்துவோம் என்றும் அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டிருந்தார். தள்ளு முள்ளு ஏற்பட்டதில் பாஜக நிர்வாகி ஒருவர் காயமடைந்த நிலையில், பாசிச திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் காவல்துறையின் இந்த முறைகேடுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் அமர் பிரசாத் விமர்சித்திருந்தார்.
The anti-democratic fascist TN government indulging in cowardice by removing the flag post from Thalaivar @annamalai_k avl's residence. We will payback with interest ! @AmitShah @blsanthosh pic.twitter.com/tFd8WefOMz
— Amar Prasad Reddy (@amarprasadreddy) October 20, 2023
இந்நிலையில் தான், அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டு வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
அசிங்க அசிங்கமா பேசுறாங்க..என் கட்சியில எனக்கே பாதுகாப்பு இல்லை! பரபரப்பை பற்ற வைத்த பாஜக கவுன்சிலர் -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications