அண்ணாமலை "முகம்.." எஸ்வி சேகர் கிண்டல்! இனி பொறுக்க முடியாது குருநாதா.. கட்டம் கட்டும் அமர் பிரசாத்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் எஸ்வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டரில் பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர் அண்மையில் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் பேசிய எஸ்வி சேகர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

"அவர் உளறுவது ரொம்ப மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. ஒரு எம்.எல்.ஏ. சீட்டையே வெற்றிபெற முடியாத ஒருவர், இத்தனை பண வசதியும், இத்தனை ஆளு பலம் கொடுத்தும் ஜெயிக்க முடியவில்லை என்றால் அது முக ராசி. இந்த மூஞ்சியை பார்த்ததும் எதுக்குடா இதுக்குலாம் போடனும். ஏன்னா அதுக்குதான் ஊர்வலம் போறாங்க.
எம்.எல்.ஏ., எம்.பி தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஏன் ஊர்வலம் போகிறார்கள்? அந்த மூஞ்சி ஒரு நம்பிக்கை கொடுக்கும். அண்ணாமலையின் மூஞ்சி நம்பிக்கை கொடுக்கும் மூஞ்சியாக இல்லை." என்று எஸ்வி சேகர் பேசி இருந்தார். இதுதான் பாஜகவினரை கொதிப்படைய செய்து இருக்கிறது.
Thiru @annamalai_k Avl, We can't tolerate this abuse anymore. This person needs to be chucked out of the party.
— Amar Prasad Reddy (@amarprasadreddy) June 7, 2023
As per the BJP Constitution “Breach of Discipline” is directly applicable here.
pic.twitter.com/SymccRopaB
இந்த நிலையில் அந்த வீடியோவை ட்விட்டரில் ரீட்வீட் செய்துள்ள பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, எஸ்வி சேகர் மீது கட்சி சட்ட விதிகளின்படி அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவையும் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த பதிவில், "திரு அண்ணாமலை அவர்களே, இனியும் இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. கட்சியை விட்டே இந்த நபரை நீக்க வேண்டும். பாஜகவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒழுக்கத்தை மீறியதற்காக அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும்."என்று அமர் பிரசாத் வலியுறுத்தி இருக்கிறார்.
-
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications