தலைமறைவா? அதெல்லாம் இல்லீங்க.. டெல்லியில்தான் இருந்தேன்! அமர் பிரசாத் ரெட்டி விளக்கம்
சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நேற்று முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தான் தலைமறைவாக இல்லையென்றும், டெல்லியில் முக்கிய பணியாற்றிக்கொண்டிருந்ததாகவும் அமர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்.
பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 போ் மீது கோட்டூர்புரம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்த காரணத்தால் போலீசாரால் அவரை பிடிக்க முடியவில்லை.

மறுபுறம் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது இந்த பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கில் நேற்று அமர் பிரசாத் ரெட்டிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய அவர், தான் தலைமறைவாக இருக்கவில்லை என்றும், டெல்லியில் முக்கிய வேலையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, "டெல்லியில் முக்கியமான வேலையாக இருந்தேன். தலைவர் கொடுத்த வேலையை செய்து கொண்டிருந்தேன்.
போன முறை என்னை கைது செய்யும்போது, என்னிடம் ரூ.20,000 கோடி இருப்பதாக ஆளும் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பல்வேறு செய்தித்தாள்களிலும் இந்த செய்தி வெளியானது. ஆனால் தற்போது இந்த தொகை வெறும் ரூ. 50,000 ஆக குறைந்திருக்கிறது. நியாயப்படி பார்த்தால் ரூ.50,000 கோடி இருக்கிறது என்று தான் குற்றச்சாட்டு எழுந்திருக்க வேண்டும். ஆனால் வெறும் ரூ.50,000 என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மகாத்மா காந்தியே தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் கூட அவர் மீதும் திமுக அரசு 10 பொய் வழக்குகளை போட்டிருக்கும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதே தெரிந்து இருக்காது. மீண்டும் இரண்டு வழக்குகள் என் மீது பதிய ரெடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. யார் வீட்டிலாவது தண்ணீர் வரவில்லை என்றால் கூட அதற்கும் என் மீது தான் வழக்கு போடுவார்கள் போல..
தலைமறைவாக இருந்தேன் என்று சொல்கிறார்கள், ஆனால் காவல்துறை அதிகாரிகளுக்கு நான் தொடர்ச்சியாக 10 முறை ஃபோன் அடித்திருக்கிறேன். அவர்கள் என்னுடைய போனை எடுக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்











Click it and Unblock the Notifications