மேஜர் முகுந்த் வரதராஜன் ஜாதி, அமரன் படத்தில் மாற்றப்பட்டுள்ளது.. முன்னாள் ராணுவ அதிகாரி விமர்சனம்
சென்னை: இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினெண்ட் கர்னலும், அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத்தின் துணைத் தலைவருமான தியாகராஜன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய 'அமரன்' படத்தின் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
"மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட 'அமரன்' படம், சூரரைப் போற்று படத்தைப் போலவே, உண்மைச் சம்பவங்களை திரித்துள்ளது" என்று தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

"ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த தமிழரான மேஜர் முகுந்த் வரதராஜன் தனது தந்தையை 'அப்பா' என்றுதான் அழைத்தார். ஆனால், படத்தில் அவரை 'நைனா' என்று அழைப்பது போல காட்சியமைத்து, அவரது பிராமண அடையாளத்தை மறைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு வீரனின் உண்மையான கதையை, திராவிட இயக்க கண்ணோட்டத்தில் பார்ப்பது அவரது பின்னணியையும் உண்மையான குணத்தையும் புறக்கணிப்பதாகும். முகுந்த் போன்ற உண்மையான வீரர்கள் உண்மையான சித்தரிப்பைத்தான் பெற வேண்டும். திரிபு செய்து கதையை உருவாக்குவது சரியல்ல" என்று அவர் கூறியுள்ளார்.
"இந்திய ராணுவத்தின் உண்மையான நாயகர்களைப் பற்றிய படங்களை தயாரிக்க ஒப்புதல் அளிப்பதற்கு முன், படக் குழுவினருக்கு எந்த மறைமுக நோக்கமும் இல்லாததை, இந்திய ராணுவ மக்கள் தொடர்பு பிரிவு நன்கு உறுதி செய்ய வேண்டும். தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்கள், வெளிப்படையான மரியாதைக்குரிய சித்தரிப்பைத்தான் பெற வேண்டும். அவர்கள் பிறப்பை மறைக்க தேவையில்லை. அவர்களை மறைமுக நோக்கங்களுக்காக மாற்றியமைப்பது சரியல்ல" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
"ஒரு சுயசரிதை அவரது வாழ்க்கையை உண்மையாக சித்தரிக்க வேண்டும். இவர்களின் கருத்தியலுக்காக அவரது பிராமண பின்னணியை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல" என்று தியாகராஜன் தெரிவித்துள்ளார். சூரரைப் போற்று 'ஏர் டெக்கான்' நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் ஆகும். கோபிநாத் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும், திரைப்படத்தில் அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக காட்டப்பட்டிருப்பார். இதைக் குறிப்பிட்டுள்ள தியாகராஜன், அதே மாதிரிதான், தமிழகத்தில் இன்னொரு பயோ-பிக் படமாக அமரனும் வலிந்து திரிக்கப்பட்ட காட்சிகளோடு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications