Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.2 பழைய நோட்டு இருக்கா? "786" ஸ்பெஷல் நம்பர் இருக்கா? 2 ரூபாய்க்கு 5 லட்சம் வருமானம்.. செம சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய 2 ரூபாய் நோட்டுகள் இருந்தால் போதும்.. உங்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்று சோஷியல் மீடியாவில் மீண்டும் ஒரு செய்தி பரவி ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.

ஆன்லைன் சந்தையில் பழைய மற்றும் அரியவகை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான தேவையும் அதிகரித்துவிட்டன. அந்தவகையில், அரியவகை 10 ரூபாய், பழைய 20 ரூபாய், பழைய 50 ரூபாய்களுக்கெல்லாம் மிகவும் பஞ்சமாகிவிட்டது.

Amazing Chance online Income and do you have Old rs2 note with 786 Special number you can get upto 5 lakhs rupees

எகிறும் மவுசு: அதனால்தானோ என்னவோ, இந்த பழைய ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதை வைத்தே சம்பாதிக்கலாம் என்று சோஷியல் மீடியாவில் அடிக்கடி வெளியாகி கொண்டேயிருக்கின்றன..

குறிப்பாக, பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக விலைக்கு வாங்கப்படும்.. 10 ரூபாய் நோட்டுக்கள் தந்து, 10 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கலாம். https://coinbazzar.com என்ற வெப்சைட்டில் 10 ரூபாய் நோட்டுகளை நீங்கள் விற்கலாம்.

கிராக்கி: பழைய 20 ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தியின் போட்டோவும் இருக்க வேண்டும். "786" என்ற நம்பர் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.. இஸ்லாமிய மக்களிடையே 786 என்ற எண் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த 20 ரூபாய் நோட்டினை, ஆன்லைனில் OLX -ல் விற்பனை செய்யலாம்.. வெறும் 20 ரூபாய்க்கு, 6 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்குமாம்.

50 ரூபாய் நோட்டுக்கும் ஆன்லைனில் 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்கிறார்கள். இதற்கு Quikr என்ற வெப்சைட்டில் ஒரு விற்பனையாளராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஸ்பெஷல் நம்பர்: இந்த லிஸ்ட்டில் 2 ரூபாய் நோட்டும் தற்போது இணைந்துள்ளது.. பழைய 2 ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்பனை செய்தால் சுமார் ரூ.5 லட்சம் வரை பெறமுடியுமாம்.. இந்த ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் "786" என்ற எண் வரிசை மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் மன்மோகன் சிங்கின் கையெழுத்து இருக்க வேண்டுமாம்.. அதுமட்டுமல்ல, இந்த ரூபாய் நோட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

இந்த பழைய ரூபாய் நோட்டை Quickr, Olx, eBay போன்ற வெப்சைட்டில் விற்பனை செய்யலாம். அப்படி விற்பனை செய்ய விருப்பம் இருந்தால், முதலில் சம்பந்தப்பட்ட ஆன்லைன் வெப்சைட்டில் ஒரு விற்பனையாளராக பதிவுசெய்ய வேண்டும். பிறகு, நீங்கள் விற்க போகும் ரூபாய் நோட்டை தெளிவாக போட்டோ எடுத்து அப்லோடு செய்ய வேண்டும். இந்த விளம்பரத்தை பார்க்கும் நபர்கள், உங்களை தொடர்பு கொள்வார்கள்.

முழு பொறுப்பு: இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க கவனமுடன் நீங்கள் மட்டுமே செயல்பட வேண்டும். மேலும், ஆன்லைனில் இந்த அரியவகை நோட்டுகளுக்கு இருக்கும் டிமாண்ட் + கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்கும்.. ஆனால், எப்போதுமே, ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களை விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான், இதில் கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+