தட்கலில் நொடியில் டிக்கெட் காலி.. உங்க கிட்ட இந்த ஆப் இருக்கா? அன் ரிசர்வ்டு கோச்சிலும் ஈஸியா போலாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தட்கலில் டிக்கெட்டை புக்கிங் செய்வோருக்கு ஏராளமான வசதிகளை இந்தியன் ரயில்வே செய்து தந்துள்ளது. அந்தவகையில், யூடிஎஸ் முறையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த UTS செயலியை எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டுமானால், ​​பயணிகளின் விவரங்களை நிரப்புவதற்கே நேரம் அதிகமாகிவிடும்.. இதை நிரப்பி முடிப்பதற்குள் உங்களுக்கு பின்னால் வருபவர்கள் டிக்கெட் எடுத்துவிடுவார்கள். அப்படியே அவசரமாக நிரப்பிவிட்டாலும்கூட, பணம் செலுத்துவதில் நேரமாகிவிடும்..

Tatkal Train ticket Railway Network UTS App

எனவே, பெரும்பாலும், தட்கலில் புக்கிங் செய்கிறீர்கள் என்றால், செல்போனில் செய்துவிடலாம். அதுவும், பயணத்தேதிக்கு ஒரு நாள் முன்பு தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.. அதேபோல AC பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும், AC அல்லாத பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு ஆரம்பமாகிறது. அந்தவகையில் தரப்பட்டிருக்கும் ஒரு மணி நேரத்தில் புக்கிங் செய்யலாம்.

ஆன்லைன் புக்கிங்: இதில், சாதாரண முன்பதிவு கட்டணத்தை விட ரூபாய் 90 ரூபாயிலிருந்து ரூபாய் 175 வரை அதிகமாக இருக்கும் (நார்மல் ஸ்லீப்பர் கோச்).. ஆனால், இதுவே AC கோச்சில் ரூபாய் 250 லிருந்து ரூபாய் 350 வரை அதிகமாக இருக்கும். ஆன்லைனில் புக் செய்தால், அதற்கு தனியாக கட்டணம் ரூபாய் 10 முதல் 25 ரூபாய் வரை பிடித்தம் செய்யப்படும்.

ஒருவேளை, தட்கலில் கடைசி நிமிடத்தில் டிக்கெட் கிடைக்காமல் போனால், நாம் செலுத்திய கட்டணம் மொத்தமாக ரீபண்ட் செய்யப்படும். ஆனால் டிக்கெட் ரத்து செய்யப்படும் முன்பே நாம் கேன்சல் செய்தால், பாதி தொகையை பிடித்துக்கொண்டுதான் மீதம் தருவார்கள்.

புதிய அறிமுகம்: அதேபோல, அன்ரிசர்வ்டு கோச்களில் பயணிக்க விரும்புவோர்களுக்காகவே, UTS என்ற செயலியை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.. கவுன்ட்டர்களில் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்க தேவையில்லை. அன்ரிசர்வ்ட் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம்.. ஆனால், டிக்கெட் புக் செய்து 3 மணி நேரம் வரை மட்டுமே அந்த டிக்கெட் செல்லும்.

பேப்ர் டிக்கெட், பேப்பர் லெஸ் டிக்கெட் என்று இரண்டு வகை உள்ளது... பேப்பர்லெஸ் டிக்கெட் என்றால், நாம் புக் செய்து அதை நம்முடைய செல்போனிலேயே வைத்திருந்து, டிக்கெட் செக்கரிடம் காண்பித்து கொள்வது.. பேப்பர் டிக்கெட் என்றால், ஆன்லைனில் புக் செய்து, அதை டிக்கெட் கவுன்ட்டரில் சென்று காண்பிக்க வேண்டும். டிக்கெட் வாங்கினால்தான் அந்த டிக்கெட் செல்லுபடியாகும்.

UTS செயலி புக்கிங்: இந்த UTS முறையில் எப்படி டிக்கெட் எடுப்பது தெரியுமா? இதற்கு முதலில் உங்கள் செல்போனில் UTS செயலியை டவுன்லோடு செய்துகொண்டு, உங்கள் செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபியை பதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்...

- செயலியின் முதல் பக்கத்தில், "Normal Booking , quick Booking , Platform Booking , Season Booking , QR Booking" என்று பதிவாகியிருக்குங்ம.

- இதில் முதன்முதலில் டிக்கெட் வாங்கும்போது, நார்மல் புக்கிங்கை (Normal Booking ) கிளிக் செய்ய வேண்டும்.. அப்போது,
Book & Travel (Paperless ) Book & Print (Paper) என்ற ஆப்ஷன்கள் வரும். இதில், உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்.. எனினும், காகிதமற்ற அதாவது, Paperless ஆப்ஷனே நமக்கு சிறந்தது.

- பின்பு, Depart from ( புறப்படும் இடம் )---> going to (சேரும் இடம்) என்ற ஆப்ஷனும், உங்களது ரயில்வே ஸ்டேஷன் code-ம் உங்களது மொபைலில் தானாகவே வரும். இப்போது உங்களது ரயில்வே ஸ்டேஷனையும், ரயில் சேரும் இடத்தையும் தேர்வு செய்யவும்.

- இப்போது "Next" என்ற பட்டனை அழுத்தி, பண பரிவர்த்தனை செய்ய வேண்டும்.. பணம் டிரான்ஸ்பர் செய்ததுமே உங்கள் கணக்கிலிருந்து வெளியே வந்தால், உங்களது டிக்கெட்டை உங்களால் பார்க்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+