கறிவேப்பிலை பெஸ்ட்.. வசம்புவை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. தலையில் பொடுகு தொல்லை தீர 20 சூப்பர் டிப்ஸ்
சென்னை: வீட்டிலுள்ள பொருட்களை பயன்படுத்தியே , பொடுகு தொல்லைக்கு நிவாரணம் பெறலாம்.. அந்தவகையில் சின்ன சின்ன டிப்ஸ்கள்தான் இவையெல்லாம்
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்து போன உயிரணுக்கள், எல்லாம் சேர்ந்து செதில் செதிலாக உதிரும். இதைதான் பொடுகு என்கிறோம்.
பொடுகு ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கலாம்.. மன அழுத்தங்கள் பொடுகு தொல்லை ஏற்பட மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. எனவே மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.

எக்ஸீமா(Eczema), சொரியாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நோய்கள், பிடி ரோஸ்போரம் ஓவல் போன்ற நுண்ணுயிரி தொற்றுகள், வறண்ட சருமம், ஹார்மோன்கள் அளவு மாறுபாடு, மனஅழுத்தம், முறையற்ற உணவுப்பழக்கம், அவசரமாக தலைக்கு குளிப்பது, தலையை துவட்டாமல் விட்டுவிடுவது, எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது, தலையில் வியர்வை தங்கிவிடுவது இதெல்லாம்தான் பொடுகு ஏற்பட காரணம்.
எனவே, உணவுப்பழக்கத்தை சரியாக பிடிக்க வேண்டும். தண்ணீர் நிறைய குடித்து, கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் போன்ற உணவுகளை சேர்க்க வேண்டும்.. இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைத்து, பொடுகுக்கு காரணமான செல்கள் அழியும். பொடுகு பிரச்சனை தீர வேண்டுமானால், இந்த குட்டி குட்டி டிப்ஸ்களை பாருங்க
- பாலக்கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்
- தலைக்கு குடித்ததுமே, ஈரமான தலைமுடியில் சிறிது பேக்கிங் சோடாவை தேய்த்து, 2 நிமிடங்களிலேயே தலையை அலசிவிட வேண்டும். இதனால் இறந்த செல்களுடன் பொடுகும் நீங்கிவிடும்.
- ஆப்பிள் சிடர் வினிகரை, சம அளவு தண்ணீர் சேர்த்து கலந்து தலையில் ஊறவைத்து 20 நிமிடம் கழித்து அலசினால் பொடுகு கட்டுப்படும்
- ஒரு கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, தயிர், எலுமிச்சம் சாறு சேர்த்து தலையில் தடவி குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.
- தயிரை தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால், உஷ்ணம் குறையும் (சைனஸ், தலைவலி இருப்பவர்கள் தவிர்க்கலாம்)
- பொடுகு தொல்லைக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் வசம்பு பொடி உதவுகிறது.. மிகச்சிறந்த கிருமி நாசினியான இந்த வசம்பு பொடியை தலைக்கு தேய்த்து குளித்து வரலாம். இதனால், தலையில் வேறு தொற்றுகள், பருக்கள், இருந்தாலும் நீங்கிவிடும்.
- நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து வாரம் ஓரிரு முறை குளித்து வரலாம்
- நெல்லிக்காய் பொடி, நெல்லிக்காய், துளசி இலைகளுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளிக்கலாம்.
- வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும்.
- துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
- பாசிப்பயிறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
- தேங்காய் பால் எடுத்து, அதை தலையில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு நீங்கும்
- முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை, மறுநாள் தலையில் தேய்த்து குளிக்கலாம்
- முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், எலுமிச்சம் சாறு கலந்தும் குளிக்கலாம்
- மிளகு தூளை பாலுடன் சேர்த்து தலையில் கலந்து 20 ஊறவைதது குளித்தாலும் பொடுகு தீரலாம்
- வேப்ப எண்ணெய் அல்லது வேப்பிலையை அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகுத்தொல்லை நீங்கிவிடும்.
- எலுமிச்சம் பழ சாறை நேரடியாக தலைக்கு தடவினால், ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து தலைக்கு தடவினாலும் பலன் கிடைக்கும்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications