இது வேற மாதிரி அசத்தல்.. கட்டணமில்லா பேருந்து திட்டம்.. பெண்களிடம் காசு.. சபாஷ் நிமிருது தமிழ்நாடு
சென்னை: கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் குறித்த குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.. இந்த தகவலானது, திமுக அரசின் இன்னொரு வெற்றியாக பார்க்கப்பட்டும் வருகிறது.
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, இலவச பஸ் பயணத்துக்கு முக்கியத்துவம் தருபவர்.. ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே பெண்களுக்கான இலவச பஸ் பயணத்துக்கு கையெழுத்து போட்டதே அதற்கு சாட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த இலவச பஸ் பயண அறிவிப்பினை எதிர்க்கட்சிகளும் அன்று நிறையவே கேள்விகளை எழுப்பின.. வாக்குறுதியில் எத்தனையோ அறிவிப்புகளை சொல்லிவிட்டு, இந்த இலவச பஸ் பயணத்தை எதற்காக இத்தனை அவசரமாக அறிவிக்க வேண்டும்? என்ற விமர்சனத்தையும் முன்வைத்தன.
ஏழ்மை நிலை: ஆனாலும், பெண்களுக்கு இப்படியான அறிவிப்பு அவசியம் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார்.. அதற்கான பலன்களையும் நடுத்தர மற்றும் ஏழ்மைநிலை பெண்கள் நேரடியாக பெற்றுவருகிறார்கள். அதனால்தான், ஸ்டாலின் கொண்டு வந்த இந்த முன்னோடி திட்டத்தை வட மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.
கடந்தவருடம், இலவச பஸ் திட்டம் குறித்து, சென்னை பெண்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதற்காக சென்னை மாநகராட்சி ஒரு ஆய்வை நடத்தியது..
அரசு பஸ்கள்: அப்போது, 2432 பேர் பெண்கள், 568 பேர் ஆண்கள். நூறு பேர் திருநங்கைகள் என மொத்தம் 3000 பேரிடம், இதுகுறித்து கருத்து கேட்டது. அதில், "89 சதவீத பெண்கள் போக்குவரத்திற்கு அரசு பஸ்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். இந்த 89 சதவீத பெண்களில், 82 சதவீதம் பேர் அரசு வழங்கியிருக்கும் இலவச பஸ் பயணத்தின் மூலம் பெருமளவு பணம் மிச்சப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.
ஆனாலும், இலவச பஸ் திட்டம் குறித்த விமர்சனங்கள் பரவலாக எழுந்தபடியே இருந்தது.. குறிப்பாக, பெண்களுக்கான இந்த 'இலவசம்' கடினமாக உழைக்கும் ஆண்களால் மட்டுமே சாத்தியமானது.. இந்த திட்டம் இயல்பாகவே நியாயமற்றது.. பாரபட்சமானது.. பெண்கள்இந்த திட்டத்தை உபயோகமில்லாமல் பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் சிலர் குறை சொல்லி வருகிறார்கள்.
போக்குவரத்து: இந்நிலையில்தான், சிஏஜி என்று சொல்லப்படும் சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG) ஒரு கருத்து கணிப்பை நடத்தி உள்ளது.. பல வருடங்களாகவே, நிலையான போக்குவரத்து துறையில் இந்த சிஏஜி பணியாற்றி வருகிறது... தமிழ்நாட்டில், திட்டத்தின் தாக்கம் மற்றும் நிலையான பொது போக்குவரத்திற்கான அணுகலை இது எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் ஆய்வு செய்து வருகிறது.
அந்தவகையில், கட்டணமில்லா பேருந்து திட்டத்தால் பயனடைந்த 3000 பெண்களை சிஏஜி நேர்காணல் செய்தது.. முக்கியமாக, சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவாரூர் என 6 நகரங்களில், பல்வேறு வயது மற்றும் சமூக-பொருளாதாரப் பின்னணியை சேர்ந்த பெண்களிடம் இந்த நேர்காணல் நடந்தது. அப்போது, 6 நகரங்களிலும், அப்பெண்கள் சொன்ன கருத்துக்கள் இவைகள்தான்:
தனியார் வாகனங்கள்: அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே, பெண்கள் இந்த பேருந்து சேவைகளை பயன்படுத்தி வருகிறார்களாம். இதனால், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் போன்ற பிற போக்குவரத்து வகைகளை பயன்படுத்துவது குறைந்துள்ளதாம்.. இதனால், மாதம் ஒன்றுக்கு, சுமார் 800 ரூபாய் சேமிக்க முடிகிறது. அந்த பணத்தில், வீட்டு தேவைகள், கல்வித்தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது.
அதிகமான பெண்கள் பொதுப்போக்குவரத்தை அணுகுவதும், பொது இடங்களில் காணப்படுவதும், இது பாலின நிலைப்பாடுகள் மற்றும் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு தொடர்புடைய தடைகளை உடைக்க உதவியிருப்பதாக, அந்த நேர்காணலில் தெரியவந்துள்ளது.
சபாஷ் ஸ்டாலின்: பெண்கள் சொன்ன இந்த கருத்துக்கள் எல்லாம் ஆய்வுகளாக தயாரானதுடன், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், I.A.S இந்த அறிக்கையையும் தற்போது வெளியிட்டிருக்கிறார். மொத்தத்தில், பெண்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதிகளை, இலவச பஸ் பயணம் வழங்குகிறது என்பதுடன், திமுக அரசு கொண்டு வந்த இந்த திட்டம், வெற்றியை பெற்றுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. சபாஷ் ஸ்டாலின்..!!!
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications