Bhagyaraj Cardiac arrest: வாக்கிங் போன பாக்யராஜ்! இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர், இயக்குநர் பாக்யராஜ் இன்று காலமான நிலையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். காலை வாக்கிங் சென்ற பாக்யராஜுக்கு என்ன ஆச்சு?

ஈரோடு மாவட்டத்தில் 1953 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர். அங்கிருந்து சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தவர் பாக்யராஜ். அப்போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கினார்.

Bhagyaraj

சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, இன்று போய் நாளை வா, சின்ன வீடு, டார்லிங் டார்லிங் டார்லிங் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கி நடித்தார்.

அவரது குடும்பப்பாங்கான கதை, நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

கிழக்கே போகும் ரயில் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் கவுண்டமணியுடன் அந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்திலும் இரு காட்சிகளில் நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார். புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தா மட்டுமில்லாமல் கதாநாயகனாக அறிமுகம் செய்தார். இதையடுத்து சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தை முதல் முதலில் 1979 ஆம் ஆண்டு இயக்கினார். இதையடுத்து ராஜேஷ் கதாநாயகனாக நடித்த கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருந்தார்.

மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ஆகியவை பாக்யராஜின் வெற்றிப் படங்களாயின. விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தைப் பாக்யராஜ் இயக்கி நடித்தார். பாக்யராஜ் தனது முத்திரையை முழுமையாகப் பதிந்து வெற்றி ஈட்டிய திரைப்படங்களாக அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்றவை கருதப்படுகின்றன.

டார்லிங், டார்லிங், டார்லிங் வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். 1982 ஆம் ஆண்டு முந்தானை முடிச்சு, படத்தில் ஊர்வசியை அறிமுகம் செய்தார்.

இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 படங்களில் நடித்தும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 25 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தனது மகன், மகளை திரைத்துறையில் ஜொலிக்க வைக்க முயன்று அது முடியாமல் போனது.

இந்த நிலையில் பாக்யராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

பாக்யராஜின் குருநாதர் பாரதிராஜா காலமானதும் பாக்யராஜ் உடைந்து போய்விட்டார். இதுவரை பாரதிராஜா என்று எங்குமே குறிப்பிடாமல் இயக்குநர், குருநாதர் என்றே அழைத்திருக்கிறார்.

பாரதிராஜா இறந்ததும் அவரது உடல் தேனியில் நல்லடக்கம் செய்யப்படும் வரை பாக்யராஜ் சோகத்தில் மூழ்கியிருந்தார். அந்த காரியங்களை முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பிய போதும் பாரதிராஜாவின் மறைவிலிருந்து அவரால் மீள முடியவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வள்ளுநர் கோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டாராம். அப்போது வீடு திரும்பிய அவர் தனக்கு லேசாக நெஞ்சு வலிக்கிறது என கூறி சோஃபாவில் அமர்ந்தாராம்.

அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மயங்கிய நிலையில் சுயநினைவை இழந்து காணப்பட்டாராம். அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் உயிரிழந்தார்.

இந்த தகவலறிந்த திரைத் துறையினர் கண்ணீர் மல்க பாக்யராஜின் வீட்டுக்கு வந்தவண்ணம் உள்ளனர். பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பார்த்திபன் சோகம் நிறைந்த முகத்துடன் வந்துள்ளார். காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் வந்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+