"சுந்தர் சி மகள் கல்யாணத்தில் சிரித்த முகம்.. பாக்யராஜின் கடைசி வீடியோ!" குஷ்பூ உருக்கமான பதிவு
சென்னை: தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன், இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று நடிகை குஷ்பு மகள் திருமண விழாவில் சிரித்த முகத்துடன் கலந்துகொண்டு அனைவருடனும் கலகலப்பாக பேசிய மனிதர், இன்று இல்லை என்ற செய்தியை ரசிகர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவரது மறைவு குறித்து வெளியாகியுள்ள தகவல்களும், கடைசியாக அவர் பொதுவெளியில் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

பாக்யராஜின் கடைசி நிமிடம்
குடும்பத்தினரிடம் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, வழக்கம்போல் நேற்று காலை பாக்யராஜ் வாக்கிங் சென்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே, "எனக்கு நெஞ்சு வலிக்கிறது" என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த தகவல் குடும்பத்தினரை மட்டுமல்ல, தமிழ் சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குஷ்பூ மகள் திருமணத்தில்
இயக்குநர் சுந்தர்.சி - நடிகை குஷ்பூ தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் 80-களின் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் பாக்யராஜும் உற்சாகமாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோல்டன் கலர் தீமை பின்பற்றி, தங்க நிற வேட்டி-சட்டை அணிந்து, சிரித்த முகத்துடன் அனைவருடனும் பேசி பழகிய பாக்யராஜின் வீடியோ தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. "அந்த சிரிப்பு இவ்வளவு சீக்கிரம் கடைசி சிரிப்பாக மாறிவிடும் என்று யாரும் நினைக்கவில்லை" என்று ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

குஷ்பூவின் உருக்கமான பதிவு
பாக்யராஜின் மறைவு செய்தியை அறிந்த நடிகை குஷ்பூ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவரது பதிவில், "Rest in peace Sir. உங்களுடன் இருந்த அந்த வேடிக்கையான தருணங்கள் என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். உங்களை நான் மிகவும் மிஸ் செய்வேன்." என்று பதிவிட்டு, தொடர்ந்து அழுகை மற்றும் கைகூப்பும் எமோஜிகளை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவு வெளியாகிய சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கமெண்ட் செய்து, பாக்யராஜுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒரே நாளில் மாறிய வாழ்க்கை
அவந்திகாவின் திருமணத்தில் ஒன்றாக கலந்து கொண்டு மகிழ்ந்திருந்த பல பிரபலங்கள், இன்று அதே பாக்யராஜின் மறைவு செய்தியால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் மீண்டும் பகிர்ந்து, "இது தான் அவருடைய கடைசி நிகழ்ச்சி என்று யாரும் நினைக்கவில்லை" என்று உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
பாரதிராஜாவுக்கு அஞ்சலி
சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அந்த இழப்பில் இருந்து இன்னும் மீளாத சினிமா உலகிற்கு, பாக்யராஜின் திடீர் மறைவு மற்றொரு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
திரைக்கதை, இயக்கம், நடிப்பு, வசனம் என தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த ஒரு கலைஞரை இழந்த வேதனையில் திரையுலகமே இன்று கண்ணீரில் மூழ்கியுள்ளது.














Click it and Unblock the Notifications