யார்னு பாருங்க.. அதுக்குன்னு இப்படியா.. சோப்பை எடுத்து அழுத்தி தேய்த்து.. சூப்பர்ல்ல..!!
குரங்கு ஒன்று துணி துவைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது
சென்னை: இணையத்தில் ஒரு சலவைக்காரரின் வீடியோ ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. அந்த வீடியோவை பார்த்து பலரும் ரசித்து சிரித்து விடுகிறார்கள்.. என்னவாம்?
இணையத்தில் சமீபகாலமாகவே விலங்குகளின் வீடியோக்கள் மக்களை ஈர்த்து வருகிறது.. இந்த விலங்குகள் நம்மை சில சமயம் மனம்விட்டு சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன.
சில சமயம் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. .சில சமயம் அதிர்ச்சியில் உறையவும் வைத்துவிடுகின்றன.. சில சமயம் நெஞ்சை பிழியும் சோகத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.

ரசிகர் பட்டாளம்
அதனால்தான், இதுபோன்ற விலங்குகளின் வீடியோகளுக்கு, சோஷியல் மீடியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது... அதிலும் குரங்கு வீடியோக்கள் சமீபகாலமாகவே வைரலாகி கொண்டிருக்கின்றன.. இந்த குரங்குகள் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும்... குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதால்தானோ என்னவோ, குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவது ரசிக்கும்படியாக இருக்கின்றன... உணவு பொருட்களை திருடுவது, நம் கைகளில் உள்ள பொருட்களை பறிப்பது போன்ற செயல்களில், குரங்குகளின் தந்திரங்களும், யுக்திகளும் அசர வைத்துவிடும்.

தண்ணி அடிச்ச குரங்கு
4 நாட்களுக்கு முன்புகூட உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவம் வீடியோவாக வெளியானது. ரேபரேலியில் குரங்கு ஒன்று, டாஸ்மாக் கடைக்குள் அடிக்கடி புகுந்துவிடுகிறதாம்.. அந்த ஏரியாவில் நிறைய டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், குறிப்பிட்ட இந்த டாஸ்மாக்கை தேடியே அந்த குரங்கு வருகிறதாம்.. கடைக்குள் நுழைந்து, மது பாட்டில்களை திருடிக் கொண்டும் போய்விடுகிறதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்... சில சமயம், அங்கேயே உட்கார்ந்து, தண்ணி அடித்துவிட்டுதான் போகிறதாம்..

குதறல்
இப்படி திருடி குடிப்பதை அந்த குரங்கு வாடிக்கையாக வைத்திருப்பதாகவும், அதை துரத்தி சென்றால் கடித்துக் குதறுவதாகவும் கடைக்காரர்கள் புலம்பி தள்ளுகிறார்கள்.. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கடைக்காரர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள்.. இப்போதும் இன்னொரு குரங்கு வீடியோ வெளியாகி உள்ளது.. அந்த குரங்கு, திருடி, தண்ணி அடித்து கொண்டிருந்தால், இந்த குரங்கு அதற்கு நேர்மாறானது..

சலவைக்காரர்
இது வீட்டுவேலையெல்லாம் இழுத்து போட்டு கொண்டு செய்கிறதாம்.. அதிலும், சூப்பராக துணி துவைக்கிறதாம்.. எப்படி ஒரு சலவைக்காரர் துணியை துவைப்பாரோ, அதுபோலவே அச்சுஅசலாக துணி துவைக்கிறதாம்... அந்த வீடியோவில், துணியை முதலில் தண்ணீரில் நனைக்கிறது.. பிறகு, அதற்கு சோப்பு தேய்த்து, அதற்கு பிறகு, துணியை துவைக்கிறது...

பிரஷ் + டோபி
இதைவிட ஹைலைட், பிரஷ் வைத்து, அழுக்குகளை தேய்க்கிறது.. நடுநடுவே துணியை, தண்ணீரில் மூழ்கி எடுத்து, மறுபடியும் பிரஷ் போட்டு அழுக்கை நீக்குகிறது.. அப்போதும் அழுக்கு போகாததால், பிரஷ்ஷை ஓரமாக வைத்துவிட்டு, துணியை கையாலேயே அடித்து தேய்க்கிறது.. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் சிரித்து கொண்டே இருக்கிறார்கள்.. ஆனால் ஒன்று, மிருகங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள மனிர்களுக்கு இன்னும் நிறைய நற்பண்புகள் இருக்கின்றன..!!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications