மக்களே ரெடியா.. நாளைக்குதான் "கறுப்பு வெள்ளி.." அடிமாடு ரேட்டில் அள்ளிட்டு போங்க
சென்னை: ப்ளாக் ஃப்ரைடே எனப்படும் கறுப்பு வெள்ளியன்று அமேசான், க்ரோமா உள்ளிட்ட விற்பனை நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளை வழங்குவது வழக்கம். இந்நிலையில் ப்ளாக் ஃப்ரைடே விற்பனை எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இது கடும் குளிர் காலமாகும். அதேபோல கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறைகளும் தொடர்ந்து வர இருக்கிறது. எனவே நவம்பர் மாத இறுதியில் இந்த கறுப்பு வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த கறுப்பு வெள்ளியன்று ஏராளமான பிராண்ட் பொருட்கள் சலுகை விலையில் கிடைக்கும். மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த கொண்டாட்டமானது சமீப காலங்களாக இந்தியாவிலும் களைகட்ட தொடங்கியுள்ளது.

அமேசான், அஜியோ, க்ரோமா, நைக்கா உள்ளிட்டவை இந்த கறுப்பு வெள்ளிக்கான அதிரடி சலுகை விற்பனையை அறிவித்துள்ளன. சுருக்கமாக சொல்வதெனில் இது ஆன்லைன், ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டமான ஒரு தினமாகும்.
இந்தியாவில் அஜியோ (Ajio) தனது அதிரடி சலுகைகளை அறிவித்திருக்கிறது. ஆடைகள், செருப்பு, ஷூ, கூலிங் கிளாஸ், அணிகலன்கள் போன்றவற்றை 50-90 சதவிகிதம் வரை தள்ளுபடி விற்பனையில் விற்க இருக்கிறது. இது தவிர மைக்கேல் கோர்ஸ், கோச், கேட் ஸ்பேட் மற்றும் ஸ்டெல்லா மெக்கார்ட்னி போன்ற சர்வதேச பிராண்டுகளுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த விற்பனை நாளை முதல் (நவ.24) வரும் 27ம் தேதி வரை நடைபெறும்.
அதேபோல ஃபாஸ்ட்-ஃபேஷன் எனப்படும் H&M நிறுவனம் தனது உறுப்பினர் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பொருட்கள் மீதும் 20 சதவிகிதம் வரை தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த சலுகை இன்று (நவ.23) நள்ளிரவு வரை மட்டும்தான். இது தவிர ஜப்பானின் பிரபல ஆடை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான Uniqlo-வும் தனது சலுகை விலை விற்பனையை தொடங்கியுள்ளது. நாளை முதல் வரும் 30ம் தேதி வரை இந்த சலுகை விற்பனை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் Zara நிறுவனத்தை பொறுத்த அளவில், குறிப்பிடத்தக்க பொருட்களுக்கு மட்டும் 40 சதவிகிதம் வரை தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு Zara செயலியிலும், 10 மணிக்கு அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் சலுகை விற்பனை தொடங்கும். நாளை (நவ.24) Zara கடைகளில் சலுகை விற்பனை தொடங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஆன்லைன் அழகுசாதன நிறுவனமான Nykaa இந்த கறுப்பு வெள்ளியை, பிங்க் வெள்ளி என கூறி சலுகை விற்பனைகளை தொடங்கியுள்ளது. அதாவது சுமார் 2,100க்கும் மேற்பட்ட பிராண்ட் பொருட்களை 50 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் கொடுக்கிறது. இந்த விற்பனை இன்று மாலை 4 மணிக்கே தொடங்கிவிட்டது. அதேபோல க்ரோமா (Croma) OnePlus, Vivo மற்றும் Realme செல்போன்களை அட்டகாசமான சலுகை விலையில் விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறது. நாளை முதல் வரும் 26ம் தேதி வரை இந்த விற்பனை நீடிக்கும்.
இவை எல்லாவற்றையும் விட, ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது அமேசான் (amazon) விற்பனையைதான். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக டேப்லெட்டுகள், ஸ்பீக்கர்கள், வாட்ச்கள், ஃபோன்கள், மடிக்கணினிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பொம்மைகள் என ஆயிரக்கணக்கான பொருட்களை சலுகை விலையில் விற்பதாக அமேசான் அறிவித்திருக்கிறது. எனவே ஸ்டாக் காலியாவதற்குள் முந்துங்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications