குடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்!

பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை தந்த நபர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூராவும் அசிங்க அசிங்கமான வீடியோக்கள்.. குடலை புரட்டும் ஆபாச படங்கள்.. இளம்பெண்ணுக்கு இப்படி வீடியோவையும் அனுப்பி பாலியல் தொல்லையும் தந்த அமேசான் டெலிவரி பாயை போலீசார் அமுக்கி கொண்டு சென்றுவிட்டனர்!

சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் அவர். 26 வயதாகிறது.. கல்யாணம் ஆகிவிட்டது.. ஆனால் கணவரை பிரிந்து அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில், இவரது செல்போனுக்கு ஆபாச வீடியோ வந்து கொண்டே இருந்திருக்கிறது.. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே இப்படித்தான் வீடியோக்கள் வருகிறதாம். அனுப்புவது யார் என்றும் தெரியவில்லை.. எல்லாமே அசிங்கமான வீடியோக்கள்.. அந்த வீடியோவையும் அனுப்பிவைத்துவிட்டு, ஆபாசமாக தொல்லையும் கொடுத்து வந்திருக்கிறார்.

சண்டை

சண்டை

நாளுக்கு நாள் அந்த மர்ம நபரின் சேட்டை அதிகமாகிவிட்டதாக தெரிகிறது.. அதனால், கடுமையான மன உளைச்சலுக்கு பெண் உள்ளானார்.. யார் இப்படி செய்வது, சண்டை போட்டு பிரிந்து வந்த காரணத்தினால், கணவர் வசந்த்குமார்தான் இப்படிஇருந்து செய்கிறாரோ என்ற சந்தேகம் அப்பெண்ணுக்கு வந்தது.

 அட்ரஸ்

அட்ரஸ்

அதனால் அந்த மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிக்கவும், கையும் களவுமாக பிடிக்கவும், அவருக்கு வீட்டு அட்ரஸையும் தந்து நேரில் வர சொன்னார் இந்த பெண்.. அட்ரஸ் கிடைத்துவிட்ட குஷியியிலும், பெண்ணை நேரில் சந்திக்க போகிறோம் என்ற ஆசையிலும் துள்ளி குதித்து ஓடிவந்தார் அந்த மர்மநபர்.. ஆனால் அதற்கு முன்னதாகவே, அந்த பெண், அக்கம்பக்கத்தினரை தன் வீட்டிற்குள் வரவழைத்திருந்தார்.

ஊழியர்

ஊழியர்

உள்ளே வந்த இளைஞர், ஒரு கும்பலே அங்கிருப்பதை பார்த்து மிரண்டு விட்டார்.. வசமாகவும் சிக்கி விட்டார்.. பெயர் விமல்ராஜ், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.. 29 வயதாகிறது.. அமேசான் நிறுவன டெலிவரி ஊழியராம் இவர்.

விசாரணை

விசாரணை

இதையடுத்து, அந்த பெண் தந்த புகாரில் சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி ஆபாச வீடியோவை அனுப்ப சொன்னதே, பெண்ணின் கணவர்தானாம். அவர் தூண்டுதலில்தான் இந்த ஊழியர் இப்படி செய்ததும் தெரியவந்தது. இந்த விஷயம் கேள்விப்பட்டதும், கணவர் எஸ்.ஆகிவிட்டார்.. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+