90 நாள் சம்பளம் வழங்கி.. 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய அமேசான் நிறுவனம்.. இ-மெயிலில் ஷாக்
சென்னை: அமேசான் நிறுவனம் கடந்த ஆண்டு 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இதன் தொடர்ச்சியாக இப்போது இந்தியா உள்பட பல நாடுகளில் பணியாற்றி வரும் 16 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. அவர்களுக்கு 90 நாட்களுக்கான சம்பளம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த ஆண்டு பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் வருகை தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. அந்த வகையில் அமேசான் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டது.

அமேசான் என்பது பிரபலமான நிறுவனங்களில் ஒன்று . ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், ஏஐ உள்பட பல்வேறு சேவைகளை அமேசான் வழங்கி வருகிறது. அமேசான் நிறுவனம் ஏஐ, ரோபோக்களை பணிக்கு பயன்படுத்துவதை அதிகரித்து வருகிறது.
16 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம்
அதன்படி 6 லட்சம் ஊழியர்கள் வரை அடுத்த சில ஆண்டுகளில் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த ஆண்டு 14 ஆயிரம் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஊழியர்களுக்கு இ-மெயில், மெசேஜ், போன்கால் மூலமாக பணி நீக்கம் பற்றிய தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இ-மெயிலில் பணிநீக்கம்
அதன்படி தற்போது இந்தியா, அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் 16,000 அமேசான் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்தின் People experience and Technology பிரிவின் சீனியர் துணை தலைவர் பெத் கலெட்டி சார்பில் 16 ஆயிர்ம ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இ-மெயிலில் இருப்பது என்ன?
அந்த இ-மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛நான் உங்களுடன் முக்கியமான அதேவேளையில் கடினமான செய்தியை பகிர்ந்து கொள்ள இருக்கிறனே். நிறுவனம் எதில் அதிக கவனம் மற்றும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முழுமையாக ஆராய்ந்தது. அதன்பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடினமான முடிவாம்
அதன்படி சில பதவிகளை நீக்க வேண்டிய கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது வணிகம் மற்றும் வர்த்தகம் சார்ந்த முடிவின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் துரதிர்ஷ்டவசமாக, உங்களின் பணியும் முடிவுக்கு வருகிறது. நோட்டிபிகேஷன் பிரியட்டை தொடர்ந்து உங்களின் பணி முடிவுக்கு வரும்.
3 மாத சம்பளம்
இந்த முடிவை நாங்கள் சாதாரணமாக எடுத்து விடவில்லை. இவை ஏற்படுத்தும் தாக்கத்தை நாங்கள் உணர்ந்து வைத்துள்ளோம். பணியாளர்களின் இந்த திடீர் பணி நீக்கத்தின்போது அவர்களுக்கு உதவவும் நாங்கள் உறுதி எடுத்துள்ளோம். அதன்படி 90 நாட்களுக்கான சிறப்பு பணிநீக்கத் தொகை (severance package), 3 மாதத்துக்கான அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகள் வழங்கப்படும்.
அதேபோல் வேறு இடத்தில் வேலை தேடுவற்கும் உதவி செய்யப்படும். AWS Skill Builder தளத்தை 12 மாதம் வரை இலவசமாக பயன்படுத்தலாம். ஊழியர்களின் உள்நுழைவு பேட்ஜ் செயலிழந்தாலும் கூட அதனை மாற்று வழியில் பயன்படுத்த முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமேசான் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications