Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய ‘மல்யுத்த ராணி’ ஹமிதா பானு! 100 ஆண்டுகள் முன் ஆண்களைப் பந்தாடியவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 100 ஆண்டுகள் முன்னால், உலகையே கலக்கி வந்த மல்யுத்த ராணி ஹமிதா பானுவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? யார் இவர்? சாதித்தது என்ன?

இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானு. இவர் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் அருகே 1900களின் முற்பகுதியில் பிறந்தார்.

Amazon of Aligarh India s first woman wrestler Hamida Banu

1940களில் பெண்கள் தடகளப் போட்டிகளில் பங்கேற்பதற்கு சமூகம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்தக் காலங்களில் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கைகள் நிறைந்து வழிந்தன.

ஆகவே பெண்கள் வீராங்கனைகளாக வெளியே வந்து சாதிப்பது என்பது கடினமாக இருந்தது. அப்படியாக ஒரு காலகட்டத்தில் அந்தத் தடைக்கற்களை எல்லாம் உடைத்து எறிந்துவிட்டு, ஒரு மல்யுத்த வீராங்கனையாக உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தார் ஹமிதா பானு.

இவரது சாதனைகளால் மிகப் பெரிய ஆளுமையாக வளர்ந்தார். ஆகவே உலகளாவிய புகழ் அவருக்குக் கிடைத்தது. அவரது காலத்தின் ஒரு முன்னுதாரணமாக வீராங்கனையாக ஒளிவீசினார்.

இன்றைக்கு அவரது தைரியத்தை இன்றைக்கு உலகமே நினைவு கூறிவருகிறது. அவரது சாதனைக்கு மரியாதை செலுத்தும்படி கூகுள் நிறுவனம் டூடுல் படமாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. அவருக்கான அங்கீகாரம் இதன்மூலம் இந்திய எல்லைகளைக் கடந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு இந்தியப் பெண் மல்யுத்த வீரர் 100 ஆண்டுகளைக் கடந்தும், அவரது சாதனைக்காக இன்று பாராட்டப்பட்டுள்ளார்.

Amazon of Aligarh India s first woman wrestler Hamida Banu

அது சரி, ஹமீதா பானு செய்த சாதனைகள் தான் என்ன?

முதலில் அன்றைய காலகட்டத்தில், ஆணாதிக்க மிக்க ஒரு மல்யுத்த விளையாட்டுத் துறையில் அவர் கால்பதித்ததே சாதனைதான்.

ஹமிதா பானு 1900களின் முற்பகுதியில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் நகருக்கு அருகே ஒரு மல்யுத்த வீரர்களின் குடும்பத்தில் பிறந்தார். குடும்பமே மல்யுத்த களத்திலிருந்ததால், அதன் மூலம் உத்வேகம் வெற்று அந்தத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். அது அவருக்கு இயற்கையாகவே அமைந்தது.

ஆனாலும், அவரது கனவு எளிதாக நிறைவேறிவிடவில்லை. பல்வேறு மல்யுத்த ஆண்களுடன் சரிக்குச்சமமாக நின்று போட்டிப் போட்டார். தன்னுடன் சண்டைக்கு வரும்படி ஆண்களுக்கு அவர் வெளிப்படையாக அழைத்தார்.

தன்னைப் போட்டியில் வெல்லும் ஆண்மகனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சாவல் விடுத்தார். அந்தளவுக்குத் தீப்பிழம்பாக மல்யுத்த களத்தில் நின்றவர் ஹமிதா.

அவரது தோற்றமே ஆண்களுக்கு இணையாக இருக்கும். நல்ல உடற்கட்டுகளுடன் அவர் இருந்தார். அவரது சவாலை ஏற்று வந்தவரை அவர் இறுதியாகத் திருமணம் செய்தும் கொண்டார். அந்தளவுக்குச் சாகசம் நிறைந்த கதைகள் ஹமிதா வாழ்க்கையில் இருக்கின்றன.

Amazon of Aligarh India s first woman wrestler Hamida Banu

இந்தியாவைத் தாண்டி பானுவின் சாதனை சர்வதேச அரங்குவரை விரிவடைந்தது. அங்கு அவர் ரஷ்யப் பெண் மல்யுத்த வீரரான வேரா சிஸ்டிலினுடன் போட்டிப் போட்டு வென்றார்.

இவரது சாதனைகள் பற்றி கூகுள், "இவரது பெயர் பல ஆண்டுகளாகச் செய்தித்தாள் தலைப்புச் செய்திகளில் வெளியானது. மேலும் இவர் "அலிகரின் அமேசான்" என்று அறியப்பட்டார்" என எழுதிக் கௌரவித்துள்ளது.

"ஹமிதா பானு தனது காலத்தின் ஒரு முன்னுதாரணமாக இருந்தார், மேலும் அவரது அச்சமின்மை இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகிறது. அவரது விளையாட்டு சாதனைகளுக்கு வெளியே, அவர் எப்போதும் தன்னுடன் உண்மையாக இருப்பதற்காகக் கொண்டாடப்படுவார்," என்று அது மேலும் கூறியது.

ஹமிதா பானுவைப் பிரபலமாக்கியது எது?

"என்னோடு போட்டிப் போட்டு என்னை அடி, நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்" என்ற சவால்தான் அவரைப் பிரபலமாக்கியது. இந்தச் சவாலை அவர் பிப்ரவரி 1954 ஆம் ஆண்டு விடுத்தார்.

இதைக் கேட்டு அன்றைய மல்யுத்த ஆண் வீரர்கள் அரண்டு போனார்கள். ஒரு பெண் வீரர் ஆண்களைப் பார்த்து சவால் விடுவதா எனக் கொதித்தெழுந்தார்கள். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, அவர் இரண்டு ஆண் மல்யுத்த சாம்பியன்களுடன் போட்டியிட்டு அவர்களைத் தோற்கடித்தார்.

அதில் ஒருவர் பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவைச் சேர்ந்தவர்

ஹமிதா பானு அதே ஆண்டு மே மாதம் மல்யுத்த போட்டிக்காகக் குஜராத்தின் வதோதராவுக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கேதான் ஒரு ட்விஸ்ட் அவருக்குக் காத்திருந்தது. இருவருடன் போட்டிப் போடவேண்டிய மல்யுத்த வீரர் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

ஒரு இது அவரது அடுத்த சவாலான பாபா பஹல்வானுக்கு வழிவகுத்தது. இந்தப் போட்டி 1 நிமிடம் 34 வினாடிகளில் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு தொழில்முறை மல்யுத்தத்தில் போட்டிகளிருந்து ஓய்வு பெற்றார் பானு.

அதனைத் தொடர்ந்து பானுவின் எடை, உயரம், உணவுக் கட்டுப்பாடு என அனைத்தும் பெரும் செய்திகளாகின. அவரது பற்றிய செய்திகளை மக்கள் ஆர்வமுடன் தேடித்தேடிப் படித்தனர். "அலிகரின் அமேசான்" என்ற பட்டத்தோடு அவர் எங்கே சென்றாலும் அவரைக் காணக் கூட்டம் கூடியது.

அன்றைக்கு உலகமே வியந்த ஹமிதாவை அவரது சொந்த கிராமமான மிர்சாபூர் மக்கள் ஏற்கவில்லை. அந்தக் கிராமம் பழமைவாதத்தில் மூழ்கிக் கிடந்தது.

பெண் ஒருவர் மல்யுத்த போட்டியில், ஆண்களைச் சவால் விட்டு அழைப்பதைக் கண்டு அம்மக்கள் விமர்சித்தனர். ஆகவே ஹமிதா, தனது சொந்த கிராமத்திலிருந்து அலிகார் சென்று வாழ நேர்ந்தது என அவரது குடும்பத்தினர் தகவல் தருகின்றனர்.

1987 ஆம் ஆண்டு வெளியான ஒரு புத்தகத்தில் எழுத்தாளர் மகேஷ்வர் தயாள், "பானு உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பல போட்டிகளில் பங்கேற்றதால், அவர் புகழ் வெகு தொலைவில் உள்ள மக்களை ஈர்த்தது" என்று எழுதி இருந்தார்.

Amazon of Aligarh India s first woman wrestler Hamida Banu

ஆனாலும், அவரது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைப் பார்த்து மக்கள் கோபமடைந்தனர். ஆகவே அவர் சவால்களை எதிர்கொண்டார். ஒருமுறை, ஒரு ஆண் போட்டியாளரைத் தோற்கடித்தற்காக ரசிகர்கள் அவர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர் என்றும் அந்தப் புத்தகம் மூலம் தெரியவந்துள்ளது.

அத்தனை தடைகள் வந்தபோதும் பானுவைத் தனது ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. அதன்பின்னர் தான் 1954 ஆம் ஆண்டு, ரஷ்யாவின் "பெண் கரடி" என்று அழைக்கப்பட்டு வந்த வேரா சிஸ்டிலினை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

அதே ஆண்டு மல்யுத்த வீரர்களுடன் சண்டையிடுவதற்காக ஐரோப்பாவுக்குப் பயணம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை எப்படி?

சிஸ்டிலினை தோற்கடித்த பிறகு, பானு மல்யுத்த போட்டிகளிலிருந்து காணாமல் போனார்.

இவரைப் பற்றி பக்கத்து வீட்டார் ரஹில் கான், " பானுவை அவரது பயிற்சியாளர் அடித்ததால் அவரது கால்கள் உடைந்தன. அவளால் நிற்க முடியவில்லை. அது பின்னர் குணமடைந்தார். ஆனால் கம்பு இல்லாமல் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. இப்படிப் பல ஆண்டுகள் அவர் கஷ்டப்பட்டார்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+