ஜனநாயகன் ரிலீஸ் தேதியை சொல்லுங்க.. இல்லைன்னா கேஸ் போடுவோம்.. அமேசான் நெருக்கடி.. விஜய் புலம்பல்
சென்னை: ஜனநாயகன் ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை எனில் சட்ட நடவடிக்கை என அமேசான் நிறுவனம், ஜனநாயகன் பட நிறுவனத்திற்கு தெரிவித்து உள்ளது.
நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு 'யு/ஏ 16+' சான்றிதழ் விவகாரம் தொடர்பாக, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி) தாக்கல் செய்த ரிட் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, 2026 ஜனவரி 20 அன்று ஒத்திவைத்தது. தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய இந்த அமர்வு வழக்கை நேற்று விசாரித்தது.

சி.பி.எஃப்.சிக்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனும், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பிக்காக மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆகியோர் வாதிட்டனர். சி.பி.எஃப்.சி பெற்ற இடைக்காலத் தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்ததோடு, விரைவு முடிவெடுக்குமாறு உயர் நீதிமன்ற அமர்வை கேட்டுக்கொண்டது.
ஜனநாயகன் வழக்கு பின்னணி
சி.பி.எஃப்.சியின் ஆய்வு குழு டிசம்பர் 19, 2025 அன்று திரைப்படத்தைப் பார்வையிட்டு, திருத்தங்களுடன் 'யு/ஏ 16+' சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தது. தயாரிப்பாளர்கள் திருத்தங்களை செய்து டிசம்பர் 24 அன்று மீண்டும் சமர்ப்பித்தனர். எனினும், ஓர் உறுப்பினரின் புகாரின் அடிப்படையில், சி.பி.எஃப்.சி டிசம்பர் 29 அன்று சான்றிதழ் நடைமுறையை நிறுத்தி வைத்தது. இதையடுத்து, ஜனவரி 5, 2026 அன்று படத்தை மறுஆய்வுக்குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கே.வி.என் புரொடக்ஷன்ஸ் ஜனவரி 6 அன்று ரிட் மனு தாக்கல் செய்தது. ஒற்றை நீதிபதி பி.டி. ஆஷா, ஜனவரி 9 அன்று சி.பி.எஃப்.சி தலைவரின் முடிவை ரத்து செய்து, உடனடியாக யு/ஏ 16+ சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சி.பி.எஃப்.சி இரு நீதிபதிகள் அமர்வில் அவசரமாக மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையைப் பெற்றது.
நீதிபதி ஆஷா தனது உத்தரவில், ஆய்வுக் குழுவின் ஒருமனதான பரிந்துரை, தயாரிப்பாளர்களின் திருத்தங்கள் பற்றி குறிப்பிட்டார். "புகார் அளித்தவரின் குறை, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது, உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது," என்று அவர் எழுதினார். "பரிந்துரைத்த உறுப்பினர் திடீரென மனமாற்றம் பெறுவது, சி.பி.எஃப்.சி முடிவின் நம்பகத்தன்மையை அதிகரிக்க செய்யும் ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும்," என்றும் அவர் எச்சரித்தார்.
இதில் தயாரிப்பு நிறுவனம் வைத்த வாதத்தில், ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை எனில் சட்ட நடவடிக்கை என அமேசான் நிறுவனம், ஜனநாயகன் பட நிறுவனத்திற்கு தெரிவித்து உள்ளது. இதனால் படத்தை உடனே வெளியிட அனுமதிக்க வேண்டும். 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். இதில் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
டிசம்பர் 22-ம் தேதி தணிக்கை வாரியத்திடம் இருந்து வந்த கடிதமே இறுதி முடிவாகக் கருதப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தரப்பு வாதிட்டது. ஆனால், இது தணிக்கை வாரியத்தின் நேரடி முடிவு அல்ல, ஒரு குழுவின் பரிந்துரை மட்டுமே என்பதை தணிக்கை வாரியம் தற்போது மறுத்து வருகிறது, என்று தயாரிப்பு தரப்பினர் வாதம் வைத்தனர்.
மத்திய அரசு மறுப்பு
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதம் வைத்தார். அதில், ஜனநாயகன் படத்திற்கு சான்று வழங்குவதில் இறுதி முடிவெடுக்கவில்லை. ஜனநாயகன் வழக்கில் பதிலளிக்க எங்களுக்கு அவகாசம் வழங்கியிருக்க வேண்டும்.
500 கோடி முதலீடு செய்துள்ளதாகக் கூறி உடனடிாக நிவாரணம் கோர முடியாது என வாதம் வைத்தனர். இதையடுத்து உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் இருவரும் தங்களுக்குள் ஆலோசனை மேற்கொண்டனர். இவர்களின் ஆலோசனை காரணமாக கோர்ட் அப்படியே அமைதி ஆனது. கோர்ட்டில் நீடித்த நிசப்தம் ஏற்பட்டது.
-
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
வேலூரில் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
கோலாட்டம் ஆடிய மாணவியின் வாயில் ’விசில்’.. அத்தனை பேர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி செய்த செயல்! -
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications