சென்னையில் மாளிகை மாதிரி இன்னொரு பேருந்து நிலையம்.. ஹை-டெக் வசதிகளுடன் எப்படி இருக்கு பாருங்க.. 2 மாதத்தில் திறப்பு
சென்னை: அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்தப் பணிகள் முடிந்து பேருந்து நிலையம் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணாடி மாளிகை போன்ற தோற்றத்துடன் பிரம்மாண்டமான ஹை-டெக் வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் மிக முக்கியப் பகுதிகளில் ஒன்றாக அம்பத்தூர் உள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர், பூந்தமல்லி, புழல், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் இந்தத் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். இதுபோக, அம்பத்தூர் பகுதியும் தற்போது அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம்
இதனால், அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் எப்போதும் பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழியும். இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, பூந்தமல்லி, சென்ட்ரல், எழும்பூர், அண்ணாசாலை, வேளச்சேரி, கிளாம்பாக்கம், ரெட்ஹில்ஸ், ஆவடி, மாதவரம் போன்ற பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துப் பணிமனையும் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையமாக அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் உள்ளது.
ஆனால், இந்தப் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குண்டும் குழியுமான சாலைகள், பயணிகள் காத்திருக்கப் போதிய இடவசதி இல்லாதது என இந்தப் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள்கூட முறையாக இல்லாமல் இருந்தன. இந்தப் பேருந்து நிலையத்தைச் சீரமைத்து நவீனப்படுத்தப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, அம்பத்தூர் பேருந்து நிலையத்தை ரூ.13.85 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கின.
கண்ணாடி மாளிகை போன்ற தோற்றம்
பழைய பேருந்து நிலைய 'ஷெட்' முழுவதுமாக அகற்றப்பட்டு, நவீன வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது பெரும்பாலான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. நவீனப்படுத்தப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே செல்லவும் வெளியே வரவும் தனித்தனிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நேரக்காப்பாளர் அறை, கழிப்பறை வசதி, பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
கண்ணாடி மாளிகை போன்ற தோற்றத்துடன் பிரம்மாண்டமாக அமையும் இந்தப் பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. இதனால், வரும் செப்டம்பருக்குள் இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்படலாம் என்று சிஎம்டிஏ வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
98 சதவீதப் பணிகள் நிறைவு
அதேபோல, சென்னையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளும் கிட்டத்தட்ட முடிவு பெறும் தருவாயில் உள்ளன. அதாவது, 98 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டன. இந்தப் பேருந்து நிலையமும் செப்டம்பர் மாதம் திறக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
முதற்கட்டமாக, பெங்களூர், தர்மபுரி மற்றும் வட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுவதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்
தற்போது, பேருந்து நிலையத்துக்குள் பெயர் பலகைகள் வைக்கும் பணியும் டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வேலைகள், சுமார் 427 கோடி ரூபாய் செலவில், அதிநவீன வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பூந்தமல்லியில் இருந்து 8.5 கிலோமீட்டர் தொலைவிலும், கோயம்பேட்டில் இருந்து 23.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளன.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications