அம்பத்தூரில் திடீர்னு வந்த ரூ.14000 மின் கட்டணம்.. நிலுவைத் தொகையை பார்த்ததுமே திகைத்த சென்னை மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அம்பத்தூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் வழக்கமாக 1000 ரூபாய் மட்டுமே மின்கட்டணம் செலுத்தி வந்த வீடுகளுக்கு, திடீரென ரூ.14,000 முதல் ரூ.18,000 வரை நிலுவைத் தொகை என மின்கட்டணம் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சென்னை அம்பத்தூர் திருவள்ளீஸ்வரர் நகரைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரின் வீட்டில் வழக்கமாக 2 மாதங்களுக்கு சராசரியாக 450 யூனிட் பயன்பாட்டிற்கு ரூ.1500 முதல் ரூ.2000 வரை மட்டுமே மின்கட்டணம் வந்து கொண்டிருந்தது..

Ambattur TANGEDCO Electricity Bill Chennai

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, திடீரென 8370 யூனிட்டுகளுக்கு ரூ.91993 மின்கட்டணம் பதிவாகியதைக் கண்டு அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

அம்பத்தூர் மின்சார வாரியம்

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், இவ்வளவு பெரும் தொகை வந்ததுமே பதறிப்போன அவர், உடனடியாகச் சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள மின் வாரிய அலுவலக அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி தவறுக்கான காரணம் கண்டறியப்படும் என்றும், மின் மீட்டரை ஆய்வுக்கு அனுப்பி அதில் தவறுயிருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்திருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால் இப்போது அதே கொடுமை, அதே அம்பத்தூரில் நடந்துள்ளது.. அம்பத்தூர் மற்றும் கொளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கமாக 1000 ரூபாய் மட்டுமே மின்கட்டணம் செலுத்தி வந்த வீடுகளுக்கு, திடீரென பல்லாயிரக்கணக்கில் நிலுவைத்தொகை என்ற பெயரில் மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் கொந்தளிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கொளத்தூர் மின் பில்

சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மாதனாங்குப்பம் பிரதான சாலை, தீப்பாச்சியம்மன் நகரிலும் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில், அந்த வீட்டின் மின்கட்டணமாக ரூ.14264 செலுத்த வேண்டும் என்று அவரது வாட்ஸ்அப்புக்கு மெசேஜ் வந்துள்ளது.

வழக்கமாக ரூ.1000-க்கும் குறைவாகவே மின்கட்டணம் செலுத்தி வந்த நிலையில், இப்படியொரு மெசேஜ் பார்த்ததுமே ஆசீர்வாதம் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் புழல் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அது முந்தைய மாதங்களின் "நிலுவைத் தொகை" (Pending Amount) என்று மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14000 மின்சார பில்

இது குறித்து ஆசீர்வாதம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஒவ்வொரு முறையும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்து சொல்லும், தொகையை நான் தவறாமல் செலுத்தி வருகிறேன். கடந்த முறை வரை 1000-க்கும் குறைவாகவே மின்கட்டணம் செலுத்திய நிலையில், இப்போது திடீரென 14,264 ரூபாய் செலுத்த வேண்டும் என்கிறார்கள்" என்று வேதனையுடன் கூறினார்.

இதேபோல ஆசீர்வாதம் வீட்டின் அருகிலுள்ள மற்ற வீடுகளுக்கும் இதேபோல ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை பெண்டிங் தொகை செலுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்..

மக்கள் அதிர்ச்சி

மின்வாரிய ஊழியர்கள் சரியாக மீட்டர் கணக்கீடு செய்யாமல், திடீரென இவ்வளவு பெரிய தொகையைக் கட்ட சொன்னால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எங்கே போவார்கள் \என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே வலுத்துள்ளது.

இதேபோல், கொளத்தூர் அடுத்த செக்ரட்டரி காலனியிலும் பல வீடுகளுக்கு வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் மின்கட்டணம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் திரண்டு சென்று, கொளத்தூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் காரசாரமாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் பரபரப்பான சூழல் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+