'அம்பேத்கர் சுடர் ' பிரகாஷ்ராஜுக்கு விசிக அளிக்கும் கவுரவம்! விசிக விருதுகள் 2024..முழு பட்டியல் இதோ
சென்னை: நடிப்பை தாண்டி சமூக நலன், அரசியல் என தொடர்ந்து பல தளங்களில் பயணித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு " ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
விசிக விருதுகள்: இதுவரை கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், து.ராஜா, குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட பலருக்கு விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறுவோரின் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.
அம்பேத்கர் சுடர்: அதில்,” இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான திரு. பிரகாஷ்ராஜ்-க்கும், பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி-க்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்க்ஸ் மாமணி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனுக்கும், காமராசர் கதிர் விருது பேராயர் எஸ்ரா சற்குணத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது பட்டியல்: இதேபோல் அயோத்திதாசர் ஆதவன் விருது பேராசிரியர் ராஜ கவுதமனுக்கும், காயிதே மில்லத் பிறை விருது மேனாள் மாநில தலைவர் சிக்கந்தருக்கும், செம்மொழி ஞாயிறு விருது கல்வெட்டியலாளர் சுப்பராயலுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருது வழங்கும் விழா மே 25ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ்: பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவுக்கு எதிராகவும் மதவெறிக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். நடிப்பை தாண்டி சமூக நலம் சார்ந்த அரசியல் உள்ளிட்ட பல தளங்களில் பயணித்து வரும் அவர் சில இடங்களில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரமும் மேற்கொண்டார். மேலும் தேர்தலில் மாற்றத்திற்காகவும் வெறுப்பிற்கு எதிராகவும் வாக்களித்ததாக கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications