அக்கா அம்பிகாவுக்கு தெரியாமல் பெயர் மாற்றம்? ராதா இப்படியா? ரூ.1000 கோடி ARS கார்டன் சொத்து பின்னணி
சென்னை: அம்பிகா மீது ராதா கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள 5 செக்குகளின் மொத்தக் கூட்டுத் தொகை ரூ. 49 கோடியைத் தாண்டுகிறது, ஆனால் புகாரில் ரூ. 46 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி சொத்து தகவல்களில் பல முரண்பாடுகள் நீடிக்கின்றன என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Aramnaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ARS கார்டன் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பிரம்மாண்டமான இடமாகும். 1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த அம்பிகா மற்றும் ராதா இருவரின் சம்பளமும் அப்போதைய காலகட்டத்தில் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை மட்டுமே இருந்தது.

அன்று வளசரவாக்கம், ஈசிஆர், ஓஎம்ஆர் போன்ற பகுதிகள் வளர்ச்சியடையாமல் காடு, ஏரி மற்றும் விவசாய நிலங்களாகவே கிடந்தன. அத்தகைய நிலத்தை அன்றைய காலகட்டத்தில் சுமார் ரூ. 20 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை கொடுத்து, அம்பிகா மற்றும் ராதா இருவரும் தங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை முதலீடு செய்து வாங்கினார்கள்.
ஏஆர்எஸ் கார்டன்
பிறகு அந்த நிலத்தை ஏஆர்எஸ் கார்டன் என்ற பெயரில் சினிமா ஸ்டுடியோவாக மாற்றினர். இன்று வரை பல படங்கள், சீரியல்களுக்கு ஷூட்டிங் பிஸியாக நடக்கும் ஒரு முக்கியமான லேண்ட்மார்க்காக அது திகழ்கிறது. இந்த ஸ்டுடியோவில் அம்பிகாவுக்கு ஒரு பங்கு, ராதாவுக்கு ஒரு பங்கு, மற்றும் அவர்களின் தாய் சரசம்மாவுக்கு ஒரு பங்கு என ஆளுக்கு சமமாக 3 பங்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
சரசம்மா சொத்து
சரசம்மா 2025 நவம்பரில் காலமாகிவிட்டார்.. சட்டப்படி தாயின் பங்கு அம்பிகா, ராதா, சகோதரி மல்லிகா, சகோதரர்களான சுரேஷ் மற்றும் மல்லிகார்ஜுனா குஞ்சன் ஆகிய 5 பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ராதா அந்த ARS கார்டன் ஸ்டுடியோ முழுவதும் தனக்கே சொந்தமானது என உரிமைக் கோருவதாகக கூறப்படுகிறது.
அம்மாவின் பங்கை ராதா பணமாகக் கொடுத்து வாங்கினாரா அல்லது அம்பிகாவுக்குத் தெரியாமல் ஆவணங்களில் பெயர்கள் மாற்றப்பட்டதா என்ற பெரிய கேள்வி இங்கு எழுகிறது.
ரூ. 1000 கோடி சொத்து, ரூ. 46 கோடி செக்
ARS கார்டன் சொத்தின் இப்போதைய மதிப்பு சுமார் ரூ. 900 கோடி முதல் ரூ. 1000 கோடி வரை இருக்கலாம் எனக் கணக்கிடப்படுகிறது. இதில் 3-ல் ஒரு பங்கு அடிப்படையில் அம்பிகாவுக்கு ரூ. 300 கோடி வர வேண்டும்.
திருவனந்தபுரம், மும்பை, பெங்களூரு போன்ற இடங்களில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் என ராதாவுக்கு ரூ. 5000 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக அம்பிகா சொல்கிறார்.. இதனால் ராதா தன் சகோதரி அம்பிகாவிடம், "உன் பங்கான ரூ. 300 கோடியை நான் பணமாகவோ அல்லது வேறு சொத்தாகவோ கொடுத்து விடுகிறேன், இந்த ஸ்டுடியோவை எனக்கு விட்டுக்கொடு" என்று ஒப்பந்தம் பேசி முடித்திருக்க வாய்ப்புள்ளது.
அம்பிகா சொல்வதை பார்த்தால், ராதா அவருக்கு மொத்தம் ரூ. 97 கோடி தர வேண்டியுள்ளது. அதில் ஒரு பகுதி தொகையாகத்தான் இந்த ரூ. 46 கோடி மதிப்புள்ள செக் கொடுக்கப்பட்டுள்ளது.
ராதாவின் மேனேஜர்
ராதாவின் மேனேஜர் மூலமாக வழங்கப்பட்ட அந்த செக்கை அம்பிகா வங்கியில் செலுத்தியபோது, அது பணமில்லாமல் பவுன் ஆகி திரும்பியுள்ளது. வழக்கமாக செக் பவுன்ஸ் ஆனால் 30 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால், செப்டம்பர் 17 அன்று செக் வங்கியிலிடப்பட்ட நிலையில், செப்டம்பர் 19 அல்லது 20-ம் தேதியிலேயே ராதா கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று, "அம்பிகா எனக்கு தெரியாமல் செக்கைத் திருடி மோசடி செய்துவிட்டார்" என்று கிரிமினல் புகார் அளித்துள்ளார்.
அவ்வளவு பெரிய தொகைக்கு, செக் புக்கில் அசால்ட்டாக 4 அல்லது 5 செக்குகளில் கையெழுத்து போட்டு வைப்பார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான்கைந்து வருடங்களாகவே சொத்துப் பிரச்சனை இருந்துவரும் நிலையில், அம்பிகா தங்கியிருக்கும் வீட்டில் செக்குகளில் கையெழுத்திட்டு ராதா வைத்திருப்பார் என்பது சாத்தியமில்லை.
அம்பிகா வீட்டில் என்ன நடந்தது
அம்பிகாவும் தன் காலத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்து ரூ. 300 முதல் ரூ. 500 கோடி வரை சொத்து வைத்திருப்பவர்தான். ஒரு லட்ச ரூபாய் செக்கை தவறாக நிரப்பிப் போட்டாலே கிரிமினல் வழக்கு பாயும் என்ற சட்ட விழிப்புணர்வு அவருக்கு நிச்சயமாக இருக்கும். வெறும் ரூ. 46 கோடிக்காகத் திருடி செக்கை போட்டு தன் நிம்மதியான வாழ்க்கையை ஆபத்தில் தள்ளிக்கொள்ள மாட்டார்.
அதுமட்டுமல்ல, ராதா கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள 5 செக்குகளின் மொத்தக் கூட்டுத் தொகை ரூ. 49 கோடியைத் தாண்டுகிறது, ஆனால் புகாரில் ரூ. 46 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி தகவல்களில் பல முரண்பாடுகள் நீடிக்கின்றன.
ராதா ஜெயிலுக்கு போவாரா?
அம்பிகா அளித்துள்ள பேட்டியில், "நான் உண்மைகளை வாய்திறந்து சொன்னால் ராதா ஜெயிலுக்கு செல்ல நேரிடும், ஏஆர்எஸ் கார்டன் ஆவணங்களில் இருந்து என் பெயரை எனக்குத் தெரியாமலே நீக்கியுள்ளனர்" என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
கிரிமினல் புகார் என்பதால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், ராதா, அம்பிகா, மற்றும் அவர்களின் சகோதரர்களிடமும் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய முயற்சிப்பார்கள்.
விசாரணையின் முடிவில் இது முழுக்க முழுக்க குடும்பத்திற்குள் நடக்கும் சொத்துப் பிரச்சனை என்பது தெரியவந்தால், இந்த வழக்கை போலீஸ் ஏற்காமல் கோர்ட்டுக்கு அனுப்பிவிடும். நீதிமன்றப்படி ஏறிவிட்டால் இந்த சிவில் வழக்குகள் 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை கூட நீடித்துக் கொண்டே போகும். அப்படி நீண்டு சென்றால், ARS கார்டன் சொத்தும் பயன்பாடின்றி முடங்கிவிடும் அபாயம் உள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
