சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆம்பூர் பிரியாணியை ருசித்த ராஜீவ் காந்தி.. பிரியாணி மாஸ்டரை கையோடு டெல்லி அழைத்து சென்ற ருசிகரம்

Google Oneindia Tamil News

சென்னை: 1988 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆம்பூர் பிரியாணியை சாப்பிட்டு அதை சமைத்த மாஸ்டரை கையோடு டெல்லி அழைத்துச் சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

சைவ பிரியர்களாக இருந்தாலும் அசைவ பிரியர்களாக இருந்தாலும் பிரியாணிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ட்ரீட் என்றாலே பிரியாணிதான்.. அந்த அளவுக்கு பிரியாணி நம்முடன் இரண்டற கலந்து விட்டது.

எத்தனையோ ஊர்கள் பிரியாணிக்கு பெயர் பெற்றிருந்தாலும், ஆம்பூரில் செய்யப்படும் பிரியாணிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. வார இறுதி நாட்களில் பிரியாணி சாப்பிடுவதற்காகவே ஆம்பூருக்கு செல்வோர் நிறைய பேர் இருக்கிறார்கள்.

மாட்டுக்கறி விற்கலைனா.. நாங்க கடை போடுவோம்! ஆம்பூர் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை -சீறும் விசிகமாட்டுக்கறி விற்கலைனா.. நாங்க கடை போடுவோம்! ஆம்பூர் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை -சீறும் விசிக

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு

திருப்பதியில் விற்கப்படும் லட்டு என ஏமாற்றி விற்கப்பட்டாலும் அதை அவ்வப்போது சாப்பிடுவோருக்கு நன்றாக தெரியும், அது அசலா போலியா என்பது! அது போல் ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் ஆம்பூர் பிரியாணி என கூறி எத்தனை கடைகள் புற்றீசல் போல் முளைத்தாலும் ஆம்பூர் பிரியாணியின் தனித்தன்மை மற்றும் ருசியால் அந்த பிரியாணி தனித்து நிற்கிறது.

தரமான பொருட்கள்

தரமான பொருட்கள்

ஆம்பூரில் செய்யும் பிரியாணியில் தரமான கோழி, ஆட்டிறைச்சி, உயர் ரக பாஸ்மதி அரிசி, தரமான மசாலா பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பிரியாணி செய்யப்படுகிறது. இந்த பிரியாணியில் பாலாற்று நீர் கலக்கப்படுவதால் அதன் சுவை மாறாமல் இருக்கிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் பிரியாணி சாப்பிட ஆம்பூருக்கு நிறைய பேர் வருகிறார்கள்.

ராஜீவ் வீட்டில் தங்கிய பிரியாணி மாஸ்டர்

ராஜீவ் வீட்டில் தங்கிய பிரியாணி மாஸ்டர்

அந்த வகையில் 1988 ஆம் ஆண்டு வாணியம்பாடிக்கு ஒரு அரசியல் நிகழ்ச்சிக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வருகை தந்தார். அப்போது அவருக்கு ஆம்பூர் பிரியாணி பரிமாறப்பட்டது. அந்த சுவையில் மெய் மறந்த அவர் டெல்லி செல்லும் போது அந்த பிரியாணியை சமைத்த மாஸ்டரையும் அழைத்து சென்றாராம்.

ரஜினிக்கும் பிடித்த பிரியாணி

ரஜினிக்கும் பிடித்த பிரியாணி

டெல்லியில் தன் வீட்டில் 4 மாதங்கள் அந்த மாஸ்டரை தங்க வைத்து அவர் கையால் பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்தாராம். அது போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் அந்த பிரியாணி கவர்ந்ததாம். எந்திரன் படப்பிடிப்புக்காக வேலூர் சென்ற போது ஆம்பூர் பிரியாணியை சாப்பிட்ட ரஜினி அசந்து போனாராம். கர்நாடகா நவாப்களிடம் இருந்து கற்றுக் கொண்ட பிரியாணி வித்தையால்தான் ஆம்பூர் பிரியாணியே மணக்கிறது.

English summary
Ambur Briyani Festival (ஆம்பூர் பிரியாணி திருவிழா): 1988 ஆம் ஆண்டு வாணியம்பாடிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆம்பூர் பிரியாணியை சாப்பிட்டு அது பிடித்து போக அதை சமைத்த மாஸ்டரையும் கையோடு டெல்லிக்கு அழைத்து சென்றாராம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X